பக்கம்:திருக்குறள் உரை.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் நாட்டில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வின் உள்ளீட்டையும் அறிந்து, அதற்கேற்ப ஆட்சியியலை இயக்கினால் ஆட்சிக்கும் பாதுகாப்பு:மக்களுக்கும் பாதுகாப்பு. 583. 584. வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு அனைவரையும் ஆராய்வது ஒற்று. ஆட்சித் தொடர்புடைய காரியங்களை இயற்றுபவர்கள், தம் சுற்றம் , வேண்டாதார் ஆகிய அனைவரையும் ஆராய்ந்தறிவதே ஒற்று. சுற்றத்தார் பகைவராதலும் கூடுமாதலால், சுற்றத்தாரையும் ஆராய்ந்தறிக என்றார். 584 585. கடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும் உகாஅமை வல்லதே ஒற்று. ஒற்றப்பட்டார் , கண்டால் ஐயுறுதலுக்குரியதல்லாத உருவத்தோடும் அஞ்சாது நின்று எங்கும் எந்தச் சூழ்நிலையிலும் உண்மையை வெளியிடாத திறனும் வாய்ந்தவனே சிறந்த ஒற்றன். ஒற்றப்பட்டார் கண்டு கொண்ட பொழுது, அகப்பட்டுக் கொண்டேனே என்ற அச்சத்தின் மெய்ப்பாடுகள் வெளிப்படாதிருத்தலை உணர்த்தியது. 'யாண்டும்.’’ என்றது உண்மையை வாங்குதல் பொருட்டு துன்புறுத்திய நிலையிலும் என்பதை உணர்த்தியது. 585. 586. துறந்தார் படிவத்தர் ஆகி இறந்து ஆராய்ந்து எண்செயினும் சோர்விலது ஒற்று. துறவிகள் வேடம் கொண்டு, மற்றவர் நெறியிகந்து துன்பம் விளைவிப்பினும் சோர்விலாது ஒற்றறியும் கடமை வழி நிற்பது ஒற்று. பலரும் நம்புதலுக்குரியது என்பதனாலும், எளிதில் தீங்கு செய்யமாட்டார் என்பதனாலும் "துறந்தார் படிவத்தள் ஆகி’ என்றார். நெறிமுறை பிறழ்ந்த நிலையில் தண்டம் தருவோரை 'இறந்தார்’ என்றார். 586. 587. மறைந்தவை கேட்கவற்று ஆகி அறிந்தவை ஐயப்பாடு இல்லதே ஒற்று. மறைவாகச் செய்த செயல்களை, அவர் தாமே சொல்லும் வகையில் அறிந்து ஐயப்பாடில்லாது தெளிந்து துணியவல்லதே ஒற்று. 'ஐயப்பாடில்லாது” என்பதை ஒற்றப்பட்டார்-ஒற்றறிவார் இருபாலும் கூட்டலாம். ஒற்றப்பட்டார் ஐயுறாதவண்ணம் நின்று அவர் தானே அவர் தம் தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை 177