பக்கம்:திருக்குறள் உரை.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்டால் அதனால் திரும்பவும் செல்வத்தைப் பெறுவர் என்பது உறுதி, 593. 594. ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா ஊக்கம் உடையான் உழை. அசைவிலாத ஊக்கத்தைப் பெற்றவனின் முகவரியைக் கேட்டுக் கொண்டு செல்வம் அவனிடம் போய்ச் சேரும். "அசைவிலா ஊக்கம்" என்பது, முயற்சியின்கண் வரும் தடைகளை இடையூறுகளைப் பொருட்படுத்தாது தொடர்ந்து முயற்சியில் ஈடுபடும் உளப்பாங்கு. 594. 595. வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தரதம் உள்ளத்து அனையது உயர்வு. குளத்தில் நிறைந்துள்ள தண்ணீரின் அளவினதாக இருக்கும் தாமரையின் (நீர்ப்பூவின்) நீளம். அதுபோலச் சமுதாயத்தின் உள்ளப்பாங்கின் அளவுக்கு மானிடரின் உயர்வு இருக்கும். எந்த ஒருபொருளும் தன் நிலையில் உயர்வதில்லை; வாழ்வதில்லை. குளத்தின்கண் வளரும் தாயரை வளர்ச்சிக்குத் தண்ணீர் துணை செய்யும், தண்ணீர் அளவு உயரவில்லையானால் வளராது. வளர முடியாது. இது தாமரையின் குற்றமன்று. அதுபோல மக்கட் சமுதாயத்தின் உளப்பாங்கு ஊக்கத்தின் பாற்பட்டதாக நிற்பின் ஆங்கு வாழும் தனி மனிதனும் ஊக்கத்துடன் உழைப்பான். அங்ங்ணமின்றி மக்கட் சமுதாயம் சுரண்டலுக்கும், ஆரவாரத்திற்கும், பொய்ம்மைக்கும் மதிப்புக் கொடுத்து ஊக்கத்தைப் புறக்கணிக்குமாயின் மனிதனிடத்தில் ஊக்கம் வளராது. இது அவன் குறையல்ல; மக்கட் சமுதாயத்தின் குறையேயாகும். 595. 596. உள்ளுவது எல்லாம் உயர்வுஉள்ளல் மற்று.அது தள்ளினும் தள்ளாமை நீர்த்து. நினைப்பது எல்லாம் உயர்வுகளையே நினைத்திடுக. இங்ங்ணம் நினைக்கப்பெறும் உயர்வு வாராதொழியினும் வந்தது போலக் கருதப்பெறும். எப்போதும் வளர்ச்சியைக் குறிக்கோளாகக் கொண்டவர்கள் எளிதான ஒன்றை இலக்காக எண்ணமாட்டார்கள். மிக உயர்ந்த ஒன்றையே இலக்காக எண்ணுவர். இங்ங்ணம் எண்ணப்பெறும் உயர் குறிக்கோள் கை கூடாது போனாலும் கைகூடியது போலவே கருதப் பெறும். 180 தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை