பக்கம்:திருக்குறள் உரை.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தாம் பிறந்த குடியை மேலும் உயர் குடியாக உயர்த்த வேண்டுவோர் சோம்பலைச் சோம்பலாகவே கருதி முயற்சியோடு வாழ்தல் வேண்டும். தாம் பிறந்த குடியை உயர்த்துதல் ஒருவனின் கடமை என்பதைக் குடிசெயல்வகை என்ற அதிகாரத்திலும் கூறுகிறார். சோம்பலின்றி முயற்சியுடன் வாழ்பவரின் குடியே உயரும் என்பது கருத்து. 603. 603. மடிமடியாக் கொண்டொழுகும் பேதை பிறந்த குடிமடியுந் தன்னினும் முந்து. சோம்பலை உடனுறையும் ஒழுகலாறாகக் கொண்டொழுகும் அறிவில்லாதவனின் பிறந்த குடி அவனுக்கு முன்பே அழியும். சோம்பலுடையான் பிறந்த குடி அழிவது உறுதி.அதனினும் உறுதி அவன் பிறந்த குடியின் அழிவு அவனுடைய அழிவுக்கு முன்பாகவே நிகழ்வது. சோம்பலுடையான் பிறந்த குடி அழிதலுக்குக் காரணம் இரக்கம் காரணமாகச் சோம்பலுடையானையும் தாங்கிவாழ்ந்ததினாலேயாம். அவனினும் அவன்குடி முந்துற அழியும் என்று கூறியது அவனைத் தாங்கிக் காப்பாற்றிய குடி அழியும் என்றதால் குடி அழிந்தபிறகு இவனைப்போல யாரும் இருக்கமாட்டார். ஆதலால் சோம்பலைத் தவிர்த்திடுக என்பதாகும். 603, 604. குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து மாண்ட உஞற்று லவர்க்கு. சோம்பலின்கண் வீழ்ந்து திருந்திய முயற்சி இல்லாது போனவரின் குடி அழிந்து குற்றங்களும் பெருகும். குடி அழிவதன் மூலம் குற்றம் பெருகும் என்றது அறிவுறுத்துவோர் இலராகப் போதலின் என்றறிக. 604. 605. நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும் கெடுநீரார் காமக் கலன். விரைந்து செய்தலையொழித்துக் காலம் நீட்டித்துச் செய்தல். மறதி, சோம்பல், மிகுதியான தூக்கம் ஆகியவை கெட்டுப்போக விரும்புபவர்கள் விரும்பி ஏற்கும் அணிகளாகும். உரிய காலத்தில் செய்யாது காலந்தாழ்த்திச் செய்தல் காரியக் கேட்டினைத் தரும். காலம் நீட்டித்துச் செய்தல் செய்யாமை போன்றதே. மறதி உறவு, பொருள் முதலிய இழப்பைத் தரும், நெடுந்துயில் - உடலுக்குச் சோம்பலைத் தரும்; நோயைத் தரும். 605. தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை 183