பக்கம்:திருக்குறள் உரை.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால் 606. படியுடையார் பற்றுஅமைந்தக் கண்ணும் மடியுடையார் மாண்பயன் எய்தல் அரிது. நிலம் முழுதும் ஆண்டாரது செல்வம் வந்து எய்திய இடத்தும், அச்செல்வத்தின் பயனைச்சோம்பலுடையார் அடைதல் அரிது. - “படியுடையார் பற்றமைந்தக் கண்ணும்' என்பதில் உள்ள உம்மை, “எய்தாமை' விளக்கிற்று என்பர். இது பொருந்தாது. பரம்பரைச் சொத்துரிமை முறையில் மன்னர் மகன் மன்னராகின்றானே. ஜனநாயக நடைமுறையில் கூட இது சாத்தியமாகிறதைக் காண்கிறோம். “பற்றமைந்தக்கண்ணும்' என்பதற்குத் தேடி அடையாத செல்வத்தை அடைந்தபோதும் காக்கும் முயற்சிதோன்றவில்லை என்ற கருத்தில் கூறினார். செல்வத்தை அடைதல், அடைந்த செல்வத்தைப் பாதுகாத்தல், அடைந்த செல்வத்தை முறையாகத் துய்த்தல், அடைந்த செல்வத்தை முறையாகச் செலவிடுதல் ஆகிய அனைத்துக்கும் முயற்சி தேவை என்பதனை அறிக. 606. 607. இடிபுரிந்து எள்ளும்சொற் கேட்பர் மடிபுரிந்து மாண்ட உஞற்றி லவர். சுற்றத்தார், நட்புடையோர் ஏளனம் செய்து சொல்லும் சொல் கேட்டும் வாளா இருப்பர் செயலில்லாது சோம்பிக் கிடப்பவர்கள். இயல்பாக முயற்சி இல்லாதவர்கள் மற்றவர்கள் இகழ்ந்து கூறும் சொல்லினைக் கேட்டுத் தாளாது சோம்பலைத் தவிர்த்து முயற்சியில் தலைப்படுவர். இகழ்ச்சி சொல்லக் கேட்டும் முயற்சியில் தலைப்படாதாரும் உண்டு. இவர்கள் மானுடப் பிறப்பினைச் சார்ந்த இழிபிறப்புயிர்களாக எண்ணப்படுதல் வேண்டும். 607. 608. மடிமை குடிமைக்கண் தங்கிற்றன் னொன்னார்க்கு அடிமை புகுத்தி விடும். சோம்பல், சிறந்த குடியில் தோன்றிய ஒருவனிடத்துத் தங்கின் அவனையும் அவன் குடியையும் அவனுடைய பகைவருக்கு அடிமைப்படுத்தி விடும். சோம்பல் காரியக் கேடு. காரியக்கேடுகள் நிகழின் ஆற்றலழிந்து அடிமைப்படுதல் நிகழும். 608. 609. குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன் மடியாண்மை மாற்றக் கெடும். 184 தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை