பக்கம்:திருக்குறள் உரை.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்டால் ஒருவனின் நல்வாழ்க்கைக்குக் களம், கருவிகள் வாய்க்காமை பழியன்று. அறிவறிந்த உழைப்பின்மையே பழி. - ழிய 'அறிவறிந்த ஆள்வினை இன்மை என்றது அறிவியலோடு சேராத உழைப்பு உரிய பயனைத் தராது என்பதனால், - so o ஏழையாகப் பிறந்தது இழிவன்று. அறிவறிந்த ஆள்வினைகள் பல இயற்றி வளமுடையராக வளராமையே பழி. 618. 619.தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும். ஒருவருக்கு நல்வாழ்க்கை என்பது விதி வகையால் அமையாது போனாலும் உடல் வருந்த முயற்சி செய்தால் அந்த அளவுக்குக் கூலி கிடைக்கும். இங்குத் தெய்வம் என்றது கடவுளையோ அல்லது மற்ற தெய்வங்களையோ அல்ல. ஆசிரியர் காலத்தில் ஊழினைத் தெய்வம் என்று கூறும் மரபு இருந்தது. * - • தெய்வத்தான் ஆகாதெனினும்-நேற்றைய வாழ்க்கையால் ஆகாது போனாலும். - நேற்றைய சோம்பல் நிறைந்த வாழ்க்கையை இன்று முயன்று மாற்றியமைத்துக் கொண்டு முயற்சி செய்தால் அந்த அளவுக்குப் பயண் கிடைக்கும். பழக்கங்களை மாற்றுவது கடுமையாதலின் “மெய்வருத்த” என்றார். - “கூலி' என்பது கொச்சைப்பொருள்தரும் சொல் அல்ல. நல்ல தமிழ்ச் சொல். பயன் என்றே பொருள் கொள்ள வேண்டும். 619. 620. ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவுஇன்றித் தாழாது உஞற்று பவர். இடர்களைக் கண்டு சளைத்து இளைத்துப் போகாமல் தொடர்ந்து தாழ்விலா முயற்சியை மேற்கொள்வோர் ஊழின் தாக்குதலையும் புறம் கண்டு பயன் காப்பர். முயற்சியின் அமைவு இன்னதென உணர்த்துவதற்காக உலைவின்றி தாழாது என்ற சொற்களை அனைத்துக் கூறினார். - 'உலைவின்றி-மனத்தில் சலனம், ஊசலாட்டம் இன்றி. "தாழாது நாளும் நாளும் தொடர்ந்து வளர்ச்சியை நோக்கி.620. 188 தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை