பக்கம்:திருக்குறள் உரை.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்டால் கடமைகளை இயற்றும் பொழுது வரும் துண் பத்திற்கு வருந்தாதவர்கள் துன்பத்திற்குத் துன்பம் கொடுப்பர். - துன்பத்தைப் போக்கும் உழைப்பே இன்பத்திற்கு வழி; வேறு குறுக்கு வழிகள் இல்லை. 623. 624. மடுத்தவாய் எல்லாம் பகடுஅன்னான் உற்ற இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து. கடமை வாய்த்த வழியெல்லாம் பகடு போலக் கடமையைச் செய்பவனின் துன்பம், தாமே துன்பத்தைப் பெறும். தூக்குதற்கரிய பாரஞ்சுமந்து இழுக்கும் எருது, பக்கவாட்டில் சாய்ந்து நிலத்தை நோக்கி முகத்தைத் தாழ்த்தி முகர்ந்தும் முழங்காலினை மடித்தும் இழுக்கும் காட்சியைச் சற்றே காண்க. அதுபோலத் துன்பத்தைக் கண்டு துன்புறாமல் உழைப்பை மேற்கொள்ளுதல் வேண்டும். 624. 625. அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற இடுக்கண் இடுக்கட் படும். துன்பங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அடுக்கி வரினும், அத்துன்பங்களுக்கு அழியாது உள்ளக்கோட்பாட்டை விடாதானுக்கு வந்துற்ற துன்பங்கள் துன்பப்பட்டுப் போகும். “அடுக்கி வரினும் ' துன்பங்களினுடைய மிகுதி பற்றிக் கூறியது. 626. அற்றேம்என்று அல்லற் படுபவோ பெற்றேம்என்று ஒம்புதல் தேற்றா தவர். பொருளைப் பெற்றபோது அதனைப் பாதுகாக்க மாட்டாதவர்கள் பொருள் அற்று வறுமை வந்தபொழுது நோவதென். 626. 627. இலக்கம் உடம்புஇடும்பைக்கு என்று கலக்கத்தைக் கையாறாக் கொள்ளாதாம் மேல். உடல் வாழ்க்கைக்குத் துன்பம் இயற்கையென்று நினைந்து துன்பத்தைத் துன்பமாக ஏற்றுக் கொள்ளாதவர்கள் மேலானவர்கள். அவர்களுக்குத் துன்பம் வாராது. துன்புறாமல் துன்புறுவன எல்லாம் வளரும்; வாழும். 627. 628. இன்பம் விழையான் இடும்பை இயல்புஎன்பான் துன்பம் உறுதல் இலன். 190 தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை