பக்கம்:திருக்குறள் உரை.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் துன்பங்களை விரும்பாமல் துன்பங்களை இயல்பாக ஏற்றுக் கொள்பவன் துன்புற மாட்டான். இன்பம், துன்பம் அனுபவிப்பவனுடைய அணுகுமுறையிலேயே இருக்கிறது. 628, 629. இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள் துன்பம் உறுதல் இலண். இன்பம் வந்துற்றபொழுது விரும்பி அனுபவிக்காதவன் துன்பம் வந்த பொழுது துன்புறுதல் இலன். இன்பத்தை விரும்பி அனுபவிப்பவர் துன்பம் வந்துற்ற பொழுது அல்லற்படுவர் என்றது. 629. 630. இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகும்தன் ஒன்னார் விழையும் சிறப்பு. ஒருவன் கடமையைச் செய்யும் பொழுது வரும் துன்பங்களை இன்பம் எனக் கொண்டொழுகின் அவன் பகைவரும் அவனை மதித்துச் சிறப்புச் செய்வர். . “ இன்னாமை இன்பம் எனக்கொளின்' என்றதால் கொள்வோர் அருமை என்பது புலப்படுத்தியது. 630, 2.அங்கவியல் 64. அமைச்சு அங்கம்- உறுப்பு. அதாவது ஆட்சியின் உறுப்புகளாக நின்று துணை செய்வன.இவற்றுள் முதல் உறுப்பு அமைச்சு. ஆம் ஆட்சிக்கு அமைச்சர்களே பொறிகளும் புலன்களுமாக நின்று நடத்துபவர்கள். சிறந்த அமைச்சினைப் பெற்ற நாடுகள் வளரும். 631. கருவியும் காலமும் செய்கையும் செய்யும் அருவினையும் மாண்டது அமைச்சு. ஆட்சியினுடைய பணிகளைச் செய்து முடிப்பதற்குரியனவாக வாய்த்திருக்கும் கருவிகள், பணி செய்தற்குரிய சூழல் அமைந்த காலம், மேற்கூறிய கருவிகாலம் முதலியனஅறிந்து செய்யும் செயல்,செய்யும் செயலின் தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை 191