பக்கம்:திருக்குறள் உரை.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால் 656. ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை. பெற்றெடுத்த தாயின் பசித் துன்பத்தைக் கண்டாலும் தாயின் பசியை நீக்கும் பொருட்டுப் பெரியோர் பழிக்கத்தக்க செயல்களைச் செய்யற்க. "துன்பத்தில் எல்லை பெற்றதாயின் பசி'என்பது ஆசிரியர் கருத்து. பெற்ற தாயின் பசி பற்றிக் கவலைப்படாதோர் இன்று உளர். 656. 657. பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர் கழிநல் குரவே தலை. பழிகளுடன் வரும் ஆக்கத்திலும் பெரியோருக்கு வறுமையே உயர்வு. "வறுமையின் காரணமாகப் பழிப்பதற்குரிய செயல்களை ஏற்கலாம்; மன்னிக்கலாம்' என்ற கொள்கையை மறுத்தது. 257. 658. கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம் முடிந்தாலும் பிழை தரும். அறநெறிகள் ஆகாவென ஒதுக்கிய செயல்களைச் செய்தார்க்கு அவை நிறைவெய்தா. ஒரோவழி நிறைவெய்தினாலும் துன்பத்தைத் தரும். 'முடிந்தாலும் ' என்பது, ஒரோவழி அறமல்லாதவை வெற்றி பெறும் என்ற உலகியற்கை உணர்த்தியது. 658, 659. அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும் பிற்பயக்கும் நற்பா லவை. பிறர் அழக்கொண்ட பொருள்கள் அழவைத்துவிட்டுப் போய்விடும்.பிறர் மகிழத் தேடிய பொருள்கள், இழந்தாலும் திரும்ப வரும். 'அழக்கொண்டவை' மற்றவர் வருந்தி உழைத்த உழைப்பில் உருவாக்கியசெல்வத்தை உரிய ஊதியம் தராமல் எடுத்துக் கொண்ட பொருள். சுரண்டப்படாமல் தப்பித்துக் கொள்வதற்குரிய அறிவு வந்தபொழுது உழைக்காமல் பெற்ற செல்வமுடையார் அவற்றை இழக்க நேரிடுதல் இயற்கையின் நியதி. 659. 660. சலத்தால் பொருள்செய்துஏம் ஆர்த்தல் பசுமணன் கலத்துள்நீர் பெய்துஇரீஇ யற்று. சூழ்ச்சிகள் மூலம் பொருளீட்டிப் பாதுகாக்க முடியும் என்று எண்ணுவது சுடப்பெறாத பச்சை மண் சட்டியில் தண்ணீரைச் சேமித்தது போலவேயாம். 200 தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை