பக்கம்:திருக்குறள் உரை.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால் 662. ஊறு,ஓரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின் ஆறுஎன்பர் ஆய்ந்தவர் கோள். ஆராய்ந்து அறிந்த அறிஞர்கள் பயன்படும் பழுதிலாப் பணிகளையே செய்கஎன்றும், பயனிலாத பழுதுபமும் செயல்களைச்செய்யற்க என்றும் கடறுவர். ஒரே வழி பழுது படும் செயல்களைச் செய்ய முனைந்து விட்டாலும் அதனை இடையில் நிறுத்தாதுபயனுடையதாக அமையத்தக்கவகையில் செய்க என்றும் &n-sh;6 liss. {}i எச்செயலும் பயனுடையதாக அமைதல் வேண்டும் என்பது ஆசிரியர் குறிக்கோள். 'பலனில் பற்றின்றிச் செய்க"என்ற ஆன்றோர் வாக்குடன் முரண்பாடுடையது ஆகாதோ எனின், இல்லை. இங்குப் பலன் என்றது தற்சார்பான பலனேயாம். 662, . 663. கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின் எற்றா விழுமந் தரும். செய்யப்பெறும் பணிகள் அச்செயலின் முடிவில், மற்றவர் அறியத்தக்க வகையில் செய்தல் மனத்திட்பம். அங்ங்ணமின்றி இடையிலேயே வெளிப்படின் அச்செயல் நீங்காத் துன்பத்தைத் தரும். உரையாசிரியர்கள் பலரும் இந்தக் குறளுக்குப் போரொடு தொடர்புபடுத்திக் குறிப்பு எழுதியுள்ளனர். ஆனாலும் இது சாதாரண மனிதனின் அன்றாட வாழ்க்கைக்கும் பொருந்தும். 663. 664. சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல். செயல்கள் - செயல்களைச் செய்யும் முறைமை பற்றிச் சொல்லுதல் எல்லோர்க்கும் எளிதாம். ஆனால், சொல்லிய வண்ணம் செய்தல் அரிது. இன்று, மனித நேயம் சோசலிசம் முதலியன பற்றி நிறையச் சொல்லுகிறார்கள் ஆனால் காரியத்தில் காண முடியவில்லை. 664. 665.வீறுஎய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண் ஊறுஎய்தி உள்ளப் படும் எண்ணங்களாலும் பிற சிறப்புக்களாலும் பெருமை பெற்றவர்களின் செயல்துணிவு, அரசராலும் நினைக்கப் பெறும், தொடக்கத்தில் கேளாது, பின் தீயூழ் வந்துழிநல்லமைச்சரின் பெருமை நினைக்கப்படும் என்றார். 665. 666. எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின். 202 தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை