பக்கம்:திருக்குறள் உரை.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால் போதிய பட்டறிவு இன்மையாலும், சுற்றுப்புறச் சூழ்நிலைகள் தகுதிப்படுத்தப்படாததாக இருப்பதனாலும் துன்பம் வரும். காலப்போக்கில்தான் எந்த ஒருபணியும் இன்பம் தர இயலும். சில பணிகள் ஒரு தலைமுறை கடந்தும் கூட இன்பம் தரலாம். இன்பம் தராமலும் போகலாம். ஆனால் இன்பம் தராது போனாலும் துண்பத்தின் தாக்கத்தைக் குறைத்திருக்கும் என்பதை அறிக. 669. 670. எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம் வேண்டாரை வேண்டாது உலகு. எந்த வகையான உறுதிகளை ஒருவர் அடைந்திருந்தாலும் செய்யும் செயலில் உறுதியில்லாதாரை உலகம் விரும்பாது. உறுதிப்பாடுடைமைக்குச் சான்று, செயலிற் காட்டும் உறுதியே என்பது பெறப்பட்டது. 670. 68. வினை செயல்வகை ஒரு செயலைச் செய்யும் வழிமுறைகளைப் பற்றி விளக்குவது. செய்யப்பெறும் ஒரு செயல்முழுமையான பயனைத் தரவேண்டுமாயின் அந்தச் செயலை முறையாகச் செய்தல் அவசியம். ஒவ்வொரு செயலுக்கும் நான்கு நிலைகள் உண்டு. ஒன்று செய்ய வேண்டிய செயலை எண்ணித் துணிதல். இரண்டு எண்ணித் துணிந்த செயலைச் செய்தலுக்குரிய காலம், கருவி, துணை முதலியன பற்றி முடிவு செய்து ஆயத்த நிலைப்படுத்தல். மூன்று செயலைச் செய்தல். நான்கு செய்த செயலைப் பயன் தரும் வரை தொடர்ந்து செய்தல் பேணுதல் பாதுகாத்தல். செயலைச் செய்வதை விடச் செயலுக்கு முன்னும் பின்னும்தான் அதிகப் பொறுப்பு இருக்கிறது என்பதறிக. 67. சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு தாழ்ச்சியுள் தங்குதல் தீது. செய்யப்புகும் ஒரு செயலைப் பற்றி நன்றாக ஆய்வு செய்து துணிந்த பின்பு அச்செயலைத் துணிவுடன் செய்யாது காலம் நீட்டித்தல் தீது, ஒரு செயலைச் செய்வது என்று துணிந்த பிறகு காலம் நீட்டித்தால் முடிவு எடுத்திருந்த செயலுக்குரிய காலம் மாறுபடுதலால் சூழ்நிலைமாறுபட்டுச் செயல் செய்தற்குரிய சூழல் கெடும் என்பதறிக. காலம் என்பது பலமுனைகளிலும் தொடர்புடையது. ஆதலால் காலம் 204 தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை