பக்கம்:திருக்குறள் உரை.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் கூடாது.காலம் நீட்டித்தால் ஏற்படும் இழப்பு ஒன்றாக இருக்காது. பலப்பல என்பது ஒர்க. காலந்தவறுதல் தாழ்ச்சியைத்தரும் என்பதால் காலம் நீட்டித்தலையே தாழ்ச்சி என்று கூறினார். 671, 672. துங்குக துங்கிச் செயற்பால துங்கற்க துங்காது செய்யும் வினை. காலம் நீட்டித்துச் செய்யக்கூடிய செயல்களைக் காலம் நீட்டித்தே செய்க காலந்தாழ்த்தாது செய்யக்கூடிய செயல்களைக் காலந்தாழ்த்தாது விரைந்து செய்க. கருத்து மாற்றங்களை எதிர்பார்த்தல், ஆகாது என்று ஒரு சிலரை ஒதுக்குதல் ஆகியவற்றில் காலம் நீட்டிப்பது பயன் தரலாம். 'காலம் மருந்து' என்பது அனுபவ வாக்கு. ஆக்கத்தின்பாற்பட்ட பணிகள், பிறர் துன்பம் துடைக்கும் பணிகள் ஆகியவற்றில் காலம் தாழ்த்துதல் கூடாது. இந்த வகைப்பணிகளில் காலந்தாழ்த்தினால் இல்லையென்று கூறியதாகவே கருதப்பெறும். 672. 673. ஒல்லும்வாய் எல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால் செல்லும்வாய் நோக்கிச் செயல். செயல் செய்து முடிக்கக்கூடிய பல்வேறு வாயில்களையும் அறிந்து செய்தால் செயல் நன்றாக முடியும். செயலைச்சிறப்புறச் செய்து முடிக்கக்கூடிய வாயில்கள் கிடைக்காது போனால் செய்யக் கூடியதைச் செய்க. ஒரு பெரிய செயலைச் செய்து முடிக்கப் பல்வேறு வாயில்களையும் கருவியாகக் கொண்டு செய்து முடித்தல் வேண்டும். அதாவது ஒரே வாயிலை மட்டும் நம்பிச் செயலைத் தொடங்குதல் கூடாது என்பதறிக. பெரிய செயல்களைச் செய்வதற்குரிய வாயில்கள் அமையாது போயின் செய்யக் கூடியவைகளைச் செய்க என்பது “செல்லும்வாய் நோக்கிச் செயல்' என்பது. 673. 674. வினைபகை என்றுஇரண்டின் எச்சம் நினையுங்கால் தீஎச்சம் போலத் தெறும். செய்யும் செயல், பகைமுடித்தல் ஆகிய இரண்டும் முழுமையாகச் செய்து முடிக்கப்பெறாதுவிடின் அணைக்காதுவிடுத்த தீப்போலத்துன்பம் தரும். செய்யத் தொடங்கிய செயல் முழுமையாகச் செய்து முடிக்காது போனால், பதிலுக்குத் துண்பம் வரும். பகையை மாற்றுதலாகிய பணியை அரைகுறையாய்விடினும் துன்பமேயாம். விட்டில் பற்றிய தி, ஒரு பகுதி அணைக்கப்பெறாது விடப்பட்டால் அணைத்த பயனும் போயிற்று. விடுத்த தி மேலும் பரவி அழிக்கும். 974. தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை 205