பக்கம்:திருக்குறள் உரை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறத்துப்பால் ஐம்புலன்களையும் அடக்கிய முனிவனின் ஆற்றலுக்கு வானுலகத் தலைவன் இந்திரனே சான்றாவான். ஐம்புலன்களை அடக்கி ஒழுகி ஆற்றல் பெற்றோர் முன் இந்திரன் பதவி இழத்தல் என்னும் மரபு வழிச் செய்தியறிக. அவித்தல் பக்குவப்படுத்துதல் - கிழங்கு அவித்தல் என்பதறிக. 25, 26. செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலா தார். செய்ய முடியாத அருஞ்செயல்களைச் செய்து முடிப்பவர்கள் பெரியவர்கள். அத்தகு செயற்கரிய செயல்களைச் செய்து முடிக்க இயலாதவர்கள் சிறியவர்கள். செய்தற்கரிய அருஞ்செயல்களைச் செய்வோரே பெரியர். அத்தகைய அருஞ்செயல்களைச் செய்ய வாய்ப்பிருந்தும் சோம்பலின் காரணமாகச் செய்யாது விடுபவர் சிறியவர். 26. 27. சுவைஒளி ஊறு,ஓசை நாற்றம்என்று ஐந்தின் வகைதெரிவான் கட்டே உலகு. சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற ஐந்தின் கூறுபாடுகளை அறிந்தவனின்கண் உலகம் அடங்கும். புலன்களின் வாயிலையும், ஐம்பூதங்களின் இயல்பையும் அறிந்தும் அவற்றை வகைப்படுத்தி ஒழுகுதற்குரிய அறிகருவிகள், செய்கருவிகள் இவற்றின் இயல்புகள் அறிந்தும் தத்தம் இயல்புக்கு ஏற்றவாறு அடக்கி வாழ்பவர்களின் கண் உலகம் அடங்கிக் கிடக்கும். இல்லையெனில் துன்புறுத்தும். 27. 28. நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும். பயன்நிறைந்த சொற்களைக் கூறுபவர்களின் பெருமையை, அவர்கள் அருளிய மறைமொழிகள் காட்டும். மறைமொழி: மறைகளுக்கு மொழிவரையறை இன்று எம்மொழியிலும் தோன்றலாம். வளர்ந்த மனிதர், முனிவர், ஞானியர் அருளுவனவே மறைமொழிகள். 28. 29. குணமென்னும் குண்றேறி நின்றார் வெகுளி கணமேயும் காத்தல் அரிது. 18 தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை