பக்கம்:திருக்குறள் உரை.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால் 675. பொருள்கருவி காலம் வினையி னொடு ஐந்தும் இருள் தீர எண்ணிச் செயல். செயல் செய்யப் புகும்போது செய்து முடித்தற்குரிய பொருள், கருவி, காலம், செயல், இடம் ஆகிய ஐந்தையும் மயக்கம் இல்லாமல் ஆய்வு செய்து எண்ணிச் செய்க. தற்சார்பாலும் சோம்பலாலும் வருவது மயக்கம். 675. 676. முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும் படுபயனும் பார்த்துச் செயல். செய்யப்புகும் செயல் முற்றாக முடியும் நிலையும், இடையூறு வரும் நிலைகளும் அச்செயல் முடித்தால் அடையும் பயனும் நோக்கிச் செய்க. அதாவது, இடையூறுகளைக் கடந்து செயல் செய்யப் பெருமுயற்சி தேவை. முயற்சியின் அளவுக்குப் பெரும் பயன் இல்லாது போனால் ஒரு செயலைச் செய்வானேன்? 676 67. செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினை உள்ளறிவான் உள்ளம் கொளல். செய்யக் கூடிய செயல்களைச் செய்பவனின் செயல்முறையாவது அச்செயலில் முன் அனுபவம் உடையாருடைய உள்ளத்தைத் துணையாகக் கொண்டு செய்தலாகும். பட்டறிவிற்கு ஈடானது ஒன்றில்லை. ஆதலால், உள்ளறிவான் உள்ளம் கொளல” என்றார். பட்டறிவுடையாரின் துணைக் கொண்டு செய்தால் காலம், பொருள், ஆற்றல் மிச்சப்படுவதுடன் சில சிக்கல்களும் தவிர்க்கப் பெறும். 677. 678. வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள் யானையால் யானையாத்தற்று. ஒரு செயலால் பிறிதொரு செயலை ஆக்கிக் கொள்ளல் மதம் பிடித்த யானையைப் பிறிதொரு யானையால் பிடித்தது போலாம். ஒரு யானையைக் கொண்டு பிறிதொரு யானையைப் பிடித்தல் யானை பிடிக்கும் மரபு. “மானைக் காட்டி மானைப் பிடித்தல் என்றும் ஒரு வழக்கு உண்டு.” ஆழ்ந்த சிந்தனையுடன் செய்தால் ஒரு செயல்வழிப் பல செயல்கள் கைகூடும். எந்தவொரு தூய்மையான தொண்டும் பண்முனைப் பயன் தரும். 678. 206 தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை