பக்கம்:திருக்குறள் உரை.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் 679. நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே ஒட்டாரை ஒட்டிக் கொளல் நண்பருக்கு நல்லது செய்தலினும் பகைவரிடமிருந்து பிரித்து எடுத்தவரிடம் விரைந்து ஒட்டிக்கொள்க. பகைவரிடமிருந்து பிரித்து எடுத்தவர் ஊசலாட்டத்தில் மீண்டும் மாறுவர் என்று கருதி விரைந்து ஒட்டிக் கொள்க என்றார். நண்பருக்குப் பகைவரால் வரும் துன்பத்தைத் தடுத்தல் நண்மை செய்தலினும் பயனுடையது என்பது கருத்து. 679. 680. உறைசிறியார் உண்ணடுங்கல் அஞ்சிக் குறைபெறின் கொள்வர் பெரியார்ப் பணிந்து. சிறியராய் இருப்பவர், தம்பகைவரைக் கண்டு உள் நடுங்கி அஞ்சுதலினும் பெரியாரைப் பணிந்து சமாதானம் செய்து கொள்ளுதல் நல்லது. அஞ்சி வாழ்தலினும் பொருது முடித்தற்கியலாதவரிடம் பொருது அழிதலினும் சமாதானம் நல்லது என்று கூறியவாறு. 680. 59. துTது இருவருக்கிடையே நட்பை ஏற்படுத்திவளர்க்கும் பணியில் ஈடுபடுதல், பழகியவர்களிடையே பிணக்குகள் ஏற்பட்டால் இடையில் இருந்துபேசி இணக்கம் ஏற்படுத்துதல், பகைமை கொண்டவர்களுக்கிடையில் பேசிச்சமாதானம் செய்து வைத்தல், கூட்டின் காரணமாக வலிமைகூடிப் போர் விளைவிப்போரை ஒருவரிடமிருந்து பிரித்தல் முதலியன துதுவரின் கடமைகள். இத்தகைய தூது பண்டு அரசுகளுக்கிடையில் மட்டுமே நிகழ்ந்ததால் அரசியல் சார்பான பணி, தூது என்று கருதப்பெற்றது. குடும்ப வாழ்க்கையிலும் சமூக வாழ்க்கையிலும் கூடத் தூது தவிர்க்க இயலாதது. பெரிய புராணத்தில் சிவபெருமான் பரவையாரிடம் சுந்தரருக்காகத் தூது சென்றமையை அறிக. தமிழர்தம் ஆட்சி அமைப்பில் அமைந்த ஐம்பெருங்குழுவில் தூதுவர் ஒர் உறுப்பினர் என்ற உண்மை அறியத்தக்கது. 681 அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம் பண்புடைமை தூதுஉரைப்பான் பண்பு. அன்புடையராக இருத்தலும் வளர்ந்த குடிமரபில் பிறந்தமையிலாகிய பின்னணியும் அரசரவிரும்பும் பண்புகளை உடையராயிருத்தலும் தூதுவர்களின் தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை 207