பக்கம்:திருக்குறள் உரை.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால் இரகசியத்தைச் செவிச்சொல்' என்றார். கேட்கும் ஒருவர் காதில் மட்டுமே புலன் ஆவதால் செவிச் சொல் என்றார். பலர் கூடியுள்ள அவையிலும் U60s; ಲಕ್ಷ್ಗಿ செய்யும் அலுவலகங்களிலும் கூடச்செவிச்சொல் தவிர்க்கப்படுதல் வேண்டும். நகைத்து விளையாடுதல் அறவே கூடாது. 694. 695. எப்பொருளும் ஓரார் தொடரார்மற்று அப்பொருளை விட்டக்கால் கேட்க மறை. அரசர் ஒருவரிடம் செவிச்சொல்லாகப் பேசும் செய்தியைத் தாமே முயன்றுகேளார். அரசரைத் தொடர்ந்துமற்றவரிடம் பேசிய செவிச்சொல் பற்றிக் கேட்கவும் மாட்டார். அரசன் தானே தம்மிடம் சொல்லவேண்டியவற்றைச் சொல்லும்பொழுது மட்டுமே கேட்கவும். மற்றவர்கள் செவிச்சொல்லாகப் பேசிக்கொள்வனவற்றைக் கேட்டறிய முற்படுவது தவறு. (அதாவது ஒட்டுக் கேட்டல் ) இருவர் செவிச் சொல்லாகப்பேசிக் கொண்டதைக் கேட்டறிய முயற்சி செய்வதும் தவறு. 695. 696. குறிப்பறிந்து காலம் கருதி வெறுப்புஇல வேண்டுப வேட்பச் சொலல். அரசனது காரியங்களைச் செய்யும் பொழுது அவன் குறிப்பினை அறிந்து காலங்கருதிச் செய்ய வேண்டும். அரசன் வெறுப்புக் காட்டுபவை வேண்டாம். அரசன் விரும்பிக் கேட்கத்தக்க வகையில் சொல்லும் பண்பு வேண்டும். 696. 697. வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும் கேட்பினும் சொல்லா விடல். அரசன் விரும்பக் கூடிய பயனுடையனவற்றையே சொல்லுக. பயனற்றவற்றை அரசன் விரும்பிக் கேட்டாலும் சொல்லுவதைத் தவிர்த்திடுக. பயனுடையவற்றை விரும்பிக் கேட்காது போனாலும் விருப்பம் உண்டாக்கும் வகையில் சொல்லுக எண்பது கருத்து 697. 898. இளையர் இனமுறையர் என்றிகழார் நின்ற ஒளியோடு ஒழுகப் படும். 212 தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை