பக்கம்:திருக்குறள் உரை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் நற்குணம் என்னும் குன்றின் மீது ஏறி நின்றவர்கள், வெகுளியை ஒரு நொடியும் பேணிக் காக்க மாட்டார்கள். அதாவது, வெகுளியை ஒரு பொருளாகக் கொள்ள மாட்டார்கள். அவர்கள் வெகுளல் அரிது. ஒரோவழி, வெகுண்டாலும் உடன் மாறும் என்பதாம். - 29. 30. அந்தணர் என்போர் அறவோர்மற்று எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான். எல்லா உயிரினங்களிடத்திலும் குளிர்ந்த அருள்தண்மை பூண்டொழுகுபவர் அந்தணர் அறவோர். அந்தனர் பிறப்பால் அன்று; அந்தணர் என்பது சாதிப்பெயரன்று; எல்லா உயிர்களுக்கும் அருள் நலம் செறிந்த தண்ணளியை வழங்கி ஒழுகி வாழ்பவரே அந்தணர். : 30. 4. அறண் வலியுறுத்தல் வாழ்க்கை குறிக்கோளுடையது. வாழ்க்கை முழுமையுடையது ஆதலே குறிக்கோள். வாழ்க்கை முழுமையாதல் இயல்பாக நடைபெறக்கூடியதன்று. அறஞ்சார்ந்த வாழ்க்கையே வாழ்க்கையை முழுமைப்படுத்தும். சான்றோர் உணர்த்தும் அறநெறிக்கு ஆன்ற பொருள் தருவதாக வாழ்க்கை அமைதல் வேண்டும். நல்வாழ்க்கை அமைந்தாலே வான்சிறப்புத் தந்த வளம் பயனுடையதாக அமையும். கடவுளும் வாழ்த்துப் பொருள் நிலையிலிருந்து வாழ்நிலைப் பொருளாக மாறும். ஆதலால் அறம் சார்ந்த வாழ்க்கையே வாழ்க்கை என்று உணர்த்த அறன் வலியுறுத்தலாயிற்று. வையக வரலாற்றில் சிலபோது சைத்தானும் வேதங்கள் ஒதும். அதன் காரணமாக நீத்தார் எடுத்துக்கூறுதலே அறம் என்பதனை உணர்த்த நீத்தார் பெருமையைத் தொடர்ந்து, அறன் வலியுறுத்தல் கூறியது. அதாவது, சாதி முதலிய புண்மைச் சார்பும் பொருள் முதலியன சேர்க்கும் தற்சார்பும் - ஆணவச்சார்பும் இல்லாதவர்கள் சொல்லுவதே அறம் என்று அறிக. 31. சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தின்ஊஉங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு சிறப்பாகிய புகழினையும் செல்வத்தினையும் தரும் அறத்தினும் உயிர்க்கு ஆக்கம் தருவது பிறிதொன்று உளதோ தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை 19