பக்கம்:திருக்குறள் உரை.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால் கண்ணின் பார்வைக்கு ஓராயிரம்பொருளுண்டு. கண்ணின் பார்வைத் திறன்களின் வேறுபாட்டை அறிந்தவர்க்குக் கண்ணே பகையையும் உறவையும்

  • 709

5ւԱյյան. 710. நுண்ணியம் என்பார் அளக்கும்கோல் காணுங்கால் கண்ணல்லது இல்லை பிற. நுண்ணறிவுடையோரைக் கண்டறியும் அளக்குங்கோல் கண்களேயாம்; பிற அல்ல. - - - ஒருவருடைய நுண்ணறிவுத் திறனையும் கண்கள் கண்டறியும். 710. 72. அவையறிதல் சான்றோர்கள் பலர் கூடியிருக்கின்ற அவையின் தன்மையினை அறிந்து பேசுதல். 71. அவைஅறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின் தொகைஅறிந்த தூய்மை யவர். சொற்களின் வகைதொகையினை அறிந்த தூய்மையினை உடையார், அவையின் தன்மையை ஆராய்ந்தறிந்து சொல்லுக. சொற்களின் வகைதொகை-ஒரே சொல் பலபொருள் உடையதாக அமையும். அதனால் சொல்லின் தொகையறிந்து சொல்லுக என்றார். 711. 712. இடைதெரிந்து நன்குஉணர்ந்து சொல்லுக சொல்லின் நடைதெரிந்த நன்மை யவர். சொல்பவருக்கும், கேட்பவருக்கும் உள்ள இடைவெளியை நன்குணர்ந்து சொல்லுக. சொற்களின் நடையறிந்து நன்மை பயக்கச் சொல்லும் இயல்பினர் . சொல்பவருக்கும் சொல்லப்படுபவருக்கும் இடைவெளி குறைவாக இருந்தால் இருவருக்கும் உள்ள இடைவெளியைக் குறைக்கக்கூடிய சொற்களாகத் தெரிந்து சொல்ல வேண்டும் என்பது கருத்து. 'சொல்பவருக்கும் - கேட்பவருக்கும் உள்ள இடைவெளி, உணரும் திறன், நோக்கங்கள் ஆகியவற்றின் காரணமாக உருவாவது . 712. 713. அவைஅறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின் வகைஅறியார் வல்லது உம் இல். 216 தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை