பக்கம்:திருக்குறள் உரை.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால் நன்னெறியில் நின்றொழுகுவார் நிலை தடுமாறியது போன்றதே மெய்ப்பொருள்கற்றுணர்ந்தார்முன் கற்றதை முறையாகச்சொல்லும் திறனின்றி இழுக்குப்படுதல் . * நன்னெறியில் நின்றமையப்பெற்றபெருநெறிகள், ஒருஅடிதவறுதலால் பயனற்றுப் போதல்போல் கற்றுணர்ந்தார் அவையில்சொல்ல மாட்டாதார் கல்வி அறிவும் இழுக்குப்படும். 716. 77. கற்றுஅறிந்தார் கல்வி விளங்கும் கசடறக் சொல்தெரிதல் வல்லார் அகத்து. குற்றமறச் சொற்பொருள் ஆராய்ந்தறிவார் அவையில் கற்றறிந்த கல்வியினாலாய சிறப்பு விளங்கித் தோன்றும் . கற்றறிந்தார் அவையிலேயே கல்வியறிவு அறியப் பெறும் விளக்கமும் அறியப் பெறும். அதனால் கற்றறிவில்லாத அவையில் அறிவு விலை போகாது என்பது தேற்றம். 717. 718. உணர்வது உடையார்முன் சொல்லல் வளர்வதன் பாத்தியுள் நீர்சொரிந் தற்று. கல்வியறிவின் அருமையை உணர்வார்முன் சொல்லுதல் வளரும் பாத்தியில் தண்ணீரை ஊற்றியதைப் போன்றது . வளரும் பயிருக்கு நீர் துணை செய்தல் போல அறிவில் வளர்வோருக்குக் கற்றறிந்தார் அவை தரும்பாராட்டு,துணை செய்யும். 718. 79. புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள் நன்குசெலச் சொல்லு வார். கற்றறிந்த அவையில் நல்லவண்ணம் நற்பொருளைச் சொல்லும் இயல்பினை யுடையவர்கள் ஒற்றறியாப் புல்லர்கள் அவையில் மறந்தும் நற்பொருளைக் கூறுதல் வேண்டாம். புல்லர் அவையில் நல்லன கூறுதல் பன்றியின் முன்னே முத்துக்களைப் பரப்பியதைப் போலப் பயனற்றுப் போகும். 719. 720. அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தம்கணத்தர் அல்லார்முன் கோட்டி கொளல் . கொள்கையால், கோட்பாட்டால் தம்மினமில்லாதார்முன் விவாதம் செய்தல் முற்றத்தில் அமிர்தத்தினைக் கொட்டியதை ஒக்கும். 720. 218 தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை