பக்கம்:திருக்குறள் உரை.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் 73. அவையஞ்சாம்ை அவையில் அஞ்சாமல் தமது கருத்துக்களை எடுத்துக் கூறுதல் அவையில் சொல்ல அச்சம் ஏற்படக் காரணங்கள் . 1. அவையினரை நோக்கத் தமது அறிவைத் தாழ்வாகக் கருதுதல். இது தவறு தாழ்வுணர்ச்சி தீமையிலும் தீமை. அவையிலுள்ளாரிடம் சொன்னால்தான் குறை, நிறையாகும். 2. அவையினர் தமது கருத்தை ஏற்பார்களோ, மாட்டார்களோ என்ற ஐயம். இது பெரும் பிழை. பிறர் ஏற்பார்கள் அல்லது ஏற்க மாட்டார்கள் என்று எண்ணி எண்ணியதைச் சொல்லாதிருத்தல் பிழை. தொடக்கத்தில் எந்த அறிவுறுத்தலும் மக்களால் ஏற்கப்படாதவைகளே என்பதறிக. 721. வகைஅறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின் தொகைஅறிந்த தூய்மை யவர். தூய்மைகள் அனைத்தும் ஒருங்கே பெற்ற, கற்கவேண்டிய நூல்கள் பலவும் கற்றதுய்மையாளர்கள், அவையில்சேர்ந்தும்குறையுடைய சொற்களைச் சொல்லமாட்டார்கள் "ஏதாவது குறையுடைய மனிதராக இருந்தாலும் அக்குறையின் காரணமாக அச்சப்படுதலால் வாய் சோர்வர்' என்று உணர்த்திய அருமை “ வகையறிந்து' என்றதால் அறிவாண்மையும் “தொகையறிந்து” என்றதால் பலராலும் தூய்மை உடைமையும் என்றவாறு. 721. 722. கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன் கற்ற செலச்சொல்லு வார். கற்றறிந்த அவையினர்.முன் தாம் கற்றவற்றை முறையாக மனங்கொள்ளச் சொல்லும் திறமுடையவர்களைக் “கற்றவர்களில் எல்லாம் கற்றவர்” என்று அறிஞர் உலகம் பாராட்டும். நிறைய கற்றவர்கள் எடுத்துச் சொலமாட்டாமையினாலே கற்றிலர் என்று கருதப்படுகின்றனர். எதை எங்குச் சொல்லினும் கேட்பவர் மனங்கொள்ளச் சொல்லும் திறன்வேண்டும் என்பது கருத்து. 722. 723. பகையகத்துச் சாவார் எளியர் அரியர் அவையகத்து அஞ்சா தவர். பகைப்புலத்தில் வலிமை இல்லாதார்பலர் சாவர். அதுபோல சொல்லும் துணிவு உள்ளவர்கள் சிலரேயாவர். தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை 219