பக்கம்:திருக்குறள் உரை.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்டால் 737. இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும் வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு. இருவகைப்பட்ட தண்ணீரும் வாய்த்த மலையும் ஊற்றுகளும் ஆறுகளும் வலிமையுடையதாகிய அரனும் நாட்டிற்கு உறுப்பு. இருபுனல். ஏரிகளின் நீர்ப்பரப்பும் நிலத்தடி நீருமாகும். மலை இயற்கை வளத்திற்குத் துணை செய்வது. வாய்ந்தமலை என்றார். மலை எப்படி வாய்ந்திருந்தாலும் மலையைப் பசுமையாக வைத்திருப்பது மக்களின் பொறுப்பு. வருபுனல்-மழைநீர் மலைகளிலிருந்துவற்றாதுவரும் ஆற்றுநீர், ஊற்று நீர் ஆகியன வருபுனல், ஏரிகளில் நீரைப் பராமரிப்பதும் நிலத்தடி நீரைப் பராமரிப்பதும் இணைந்த பணி. 737. 738. பிணியின்மை செல்வம் விளைவுஇன்பம் ஏமம் அணிஎன்ப நாட்டிற்குஇவ் வைந்து. பிணியின்மை, செல்வமுடைமை, நுகர்பொருள்களின் விளைவு அதனால் உளதாகும் மகிழ்வு, செல்வத்தைக் காக்கும் பணிக்குத் துணையாயமையும் காவல் இவை ஐந்தும் நாட்டிற்கு அணிகளாகும். செல்வம்- பின்னே குறிப்பிடப்படும் விளைவுப் பொருள்களை நீக்கிய அனைத்துப்பொருள்களும் செல்வம் ஆகும். விளைவின்பம்-நுகர்பொருள்கள். அழியும் தன்மையினின்று விலகிய முத்து முதலியன செல்வங்கள். நுகர்பொருள்கள் விளைவு ஆகியன மிகுந்தாலும் சிறந்த காவல் இல்லாமல் போயின் பயனற்றுப் போகும் என்பதால் காவலையும் அணியெனச் சேர்த்துக் கூறினார். 738. 739. நாடுஎன்ப நாடா வளத்தன நாடுஅல்ல நாட வளந்தரு நாடு. நாடு என்று சிறப்பித்துக் கூறப்பெறுவது மக்களின் முயற்சியின்றியே வளமுடையதாக இருப்பது. மக்களுடைய முயற்சியின் பயனாக வளம் தருவது நாடல்ல. "நாடா வளத்தன” என்றது"உழவர் உழாதன நான்கு பயனுடைத்து” என்பது போல இயற்கையாக அமைந்த வளம். இது நாடு தழுவிய நிலையில் அமைவது. 739. 740. ஆங்கமைவு எய்தியக் கண்ணும் பயமின்றே வேந்தமை வில்லாத நாடு. 224 தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை