பக்கம்:திருக்குறள் உரை.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் எல்லாவிதமான வளமும் வசதிகளும் அமைந்த நாடாயினும் நல்லரசு அமையாது போனால் பயனில்லை. “காவல்" இன்மையால் கெடும் என்பதால் வேந்தமைவு இல்லாத நாடு எனறார. ஆனால், மார்க்ஸ் அரசு இல்லாத சமுதாயம் பொதுவுடைமைச் சமுதாயத்தின் இலக்கணம் என்று கூறுகின்றார். ஒவ்வொருவரும் தன்னைத்தான் கொண்டொழுகிண் காவல எதற்கு? 740. 75. அரணி நாட்டினைப் புறப்பகையினின்று காக்க உதவி செய்தல் அரண். அரணின் இலக்கணமும் இயல்பும் விரித்துரைப்பது இந்த அதிகாரம். 741. ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற் போற்று பவர்க்கும் பொருள். பிறர்மேல் படையெடுத்துச் செல்லும் அரசுகளும் அரண் பொருள் அச்சத்தின் காரணமாகப் பிறர்மேல் செல்லாது டதன்னைத்தானே காத்துக் கொள்பவர்களுக்கும் அரண் பொருளேயாம். 742. மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடைய தரண். முத்து, மணி இவைகளின் நிறத்தை உடைய நீரும், மணல் வெளியும் மலையும் அடர்த்தியான நிழல் தரும் காடும் முறையாக அமைந்தது அரண். (கோட்டை), . மணி, முத்து நிறமுள்ள தண்ணிர் தூய்மையாக இருக்கும். தூய்மையாக இருப்பதால் தரைமட்டம் அண்மையில் இருப்பதுபோலத் தெரியும். ஆழம் மிகுதியாயிருக்கும் - ஆனால் ஆழம் குறைவானது போலத் தரை தெரியும். 742. 743. உயர்வகலந் திண்மை அருமையிந் நான்கின் அமைவரண் என்றுரைக்கும் நூல். கோட்டைச் சுவர் உயரம் அகலம் உறுதி அணுகுவதற்கு அருமை என இந்நான்குடையதாய் அமைவது அரண் என்று நூல்கள் கூறும். 'உயரம்'-ஏணிவைத்து ஏற இயலாது. அகலம் - எளிதில் கடத்தலோ சுரங்கப்பாதை அமைத்தலோ இயலாது. திண்மை’- எளிதில் இடிபடாத் தன்மை."அருமை-தோற்றத்தாலேயே அச்சுறுத்தும் தன்மையது. 743, தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை 225