பக்கம்:திருக்குறள் உரை.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்டால் எவ்வளவு பெருமைக்குரியராக இருந்தாலும் பொருள் வளம் இல்லாதவரை எல்லோருமே இகழ்ச்சிசெய்வர். எவ்விதத் தகுதியும் இல்லாதவர் எனினும் பொருள் வளம் பெற்றிருப்பவரை எல்லாரும் சிறப்புச் செய்வர். இல்லாரை எல்லாரும் எள்ளுவர்-இந்த நடைமுறையில் பிழையில்லை. தகுதி பல உடையான் இல்லாதவன் ஆனது எப்படி? செல்வரை எல்லாரும் செய்வர் சிறப்பு-என்பது அறிவுக்கு முரண்பட்ட நிலை. இங்ங்ணம் செல்வர் சிறப்பிக்கப்படுதல் முறையன்று. “பொருட் செல்வம் பூரியார் கண்ணும் உள' என்னும் குறளினை அறிக. 752. 753. பொருள்என்னும் பொய்யா விளக்கம் இருள்அறுக்கும் எண்ணிய தேயத்துச் சென்று. பொருள் என்று போற்றப் பெறும் அணையா விளக்கு எண்ணிய தேசம்தோறும் சென்று பகையை மாற்றும், பொருள் திசைதோறும் அறிமுகப்படுத்திவளர்க்கும் சாதனம் என்றும் கொள்ளலாம். 753. 754 அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறன்அறிந்து தீதுஇன்றி வந்த பொருள். ஒருவண் தீவினையை விட்டு ஈட்டிய பொருள் அவனுக்கு அறத்தினையும் கொடுக்கும்; இன்பத்தினையும் கொடுக்கும். திறனறிந்து தீதிண்றி வந்த பொருள் - உழைப்பறிந்து உழைப்பின் வாயிலாக சுரண்டப்படும் தீமையின்றி வந்த பொருள் என்ற கருத்தாகக் கொள்ளலாம். “தீதின்றி வந்த பொருள் பிறர் பங்கைத் திருடியதால் வந்ததல்ல; அழக்கொண்டதுமல்ல, 754, 755. அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம் புல்லார் புரள விடல். பகைப் புலத்து மக்களிடம் காட்டும் அருளொடும், தன் நாட்டு மக்களிடம் காட்டும் அன்பொடும் வராத பொருளாக்கத்தை நல்ல அரசர்கள் ஏற்க மாட்டார்கள்; கைவிட்டு விடுவார்கள். 'அருளொடும்” என்பதற்குத் தம் குடிமக்களிடத்துச் செய்யும் அருளொடும் என்று பொருள்கூறுவர். தொடர்பிலார் மாட்டு நிகழ்வதே அருள். தன் நாட்டு மக்களைத் தொடர்பிலாதவர் என்று கூறமுடியாது. ஆதலால் பகைப் புலத்துமக்களிடம் காட்டும் அருள் என்று கூறுவது பொருத்தமாகும். பகைப்புலத்து மக்களிடம் கொஞ்சமும் இரக்கமின்றி விடழித்தல், உழுது வெள்ளெருக்கு விதைத்தல்போன்ற கொடுஞ்செயல்கள் நடந்துள்ளன என்பதை வரலாற்றில் அறிக. 228 தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை