பக்கம்:திருக்குறள் உரை.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் 'வாராப் பொருளாக்கம்' என்றதால் அரசரின் படை வீரர்கள் ஊக்கமிகுதியால் தீயவழிகளில் பொருள் ஈட்டிக்கொண்டு வருவதை ஏற்கார் என்று பொருள் கொள்ளப் பெற்றது. 755. 756. உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த் தெறுபொருளும் வேந்தன் பொருள். யாரொருவர் உரிமை கொண்டாடாமல் வந்து சேரும் பொருளும், சுங்கம் , தண்டம் வழிவரும் பொருளும் அரசுக்குரிய பொருள்கள் . வழியுரிமையுடையோர் இல்லாமை வழி கிடைக்கும் பொருள், உறுபொருள். வர்த்தகத்தில் உள்நாட்டு வெளிநாட்டு வர்த்தகத்திற்குத் தண்டல் செய்யப்படுவது சுங்கவரி ஆயம் என்று கூறுவர். இன்று உள்நாட்டில் பயன்படும் பொருளுக்கும் கூடச் சுங்கம் இருக்கிறது. 756. 757. அருள்என்னும் அன்புஈன் குழவி பொருள்என்னும் செல்வச் செவிலியால் உண்டு. அன்பு என்று சொல்லப் பெறும் தாய் பெற்ற அருள் என்னும் பிள்ளை பொருள் என்னும் செவிலியால் வளர்க்கப்படும். x உயிர்கள் மாட்டு நிகழும் உணர்வே அருள். இந்த அருள் செயற்பாட்டுக்கு வரவேண்டுமாயின் பொருள் வேண்டும். பொருளுடைமையைப் போற்றினால்தான் அன்பும் அருளும் பயன்படும். 757. 758. குன்றுஏறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்துஒன்று உண்டாகச் செய்வான் வினை. குன்றின் உச்சியில் ஏறிப்பத்திரமாக நின்று கொண்டு யானைகளின் போரைப் பார்ப்பது போன்றது தன்கையில் பொருள் உண்டாகுமாறு செயல் செய்வானது வேலை. யானைப் போரைத் தரையில் நின்று பார்த்தால் அச்சம் தோன்றலாம். போரிடும் யானைகள் தறி கெட்டு ஓடுவதால் தீமை விளையும் . ஆதலால் மலையில் ஏறி யானைப் போர் பார்ப்பது தற்காப்பு ஆகும். தற்சார்பான பொருள்நிலை உருவாக்கிக் கொள்ளும் வகையில் தொழில் செய்வது பாதுகாப்பான வாழ்க்கை முறை. அதாவது தற்சார்பான பொருளியல் என்பது கருத்து. 758. 759. செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும் டன&து.அதனின் ஆரியதுடஇல், தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை 229