பக்கம்:திருக்குறள் உரை.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால் தம்மேல் வந்த பகையினை விலக்கி மேற்செல்லும் தன்மையறிந்து தர்மாலை தாங்கிமேற்செல்வதுதானைத் தலைவனின் கடமை. தன்னுடைய நாட்டின் மாலை தாழாது தாங்கித் தம்மேல் வந்த பகையைத் தாங்கி வெற்றி கொண்டு மேற்செல்வது தானைத் தலைவனின் கடமை என்றும் பொருள் கொள்ளலாம். 767. 768. அடல்தகையும் ஆற்றலும் இல்எனினும் தானை படைத்தகையால் பாடு பெறும். பகை மேற்செல்லும் ஆற்றலும் பகை தம்மேல் வரும்பொழுது பொறுத்திடும் தகுதியும் இல்லையானாலும் தம் படைத் தோற்றத்தாலேயே மாற்றாரின் பகைப்படை படும். எடுப்பான தோற்றமும் அணிவகுப்பும் பகையை அச்சுறுத்தி வெற்றிகொளத் துணை செய்யும். 768. 769. சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும் இல்லாயின் வெல்லும் படை. படைக்குச் சின்னப் புத்தியும், நீங்காத பிணக்கும், வறுமையும் இல்லையாயின் அப்படை பகைப்படையை வெல்லும். "சிண்ணப்புத்தி பிணக்குகளுக்குக் காரணம். விரிவான மனப்பான்மையில்லையெனில் தோன்றிய பிணக்கு அகலுவதில்லை. இதனால் படைக்குள்ளேயே கழுத்தறுப்புக்கள் நிலவவும், தோற்கவும் வாய்ப்புண்டு. ‘வறுமை' நின்றழிக்கும் நோய். வறுமை எந்த ஒரு பெரிய காரியத்தையும் செய்யவிடாது. ஆதலால் படை வறுமையால் தோற்கும். 769. 770. நிலைமக்கள் சால உடைத்துஎனினும் தானை தலைமக்கள் இல்வழி இல், போரின் கண் நின்று போராடக் கூடிய வீரர் மிகப்பலரைப் பெற்றிருந்தாலும் போரினை வழி நடத்தும் தலைவன் இல்லாதபோது பயனில்லை. போர்க்குணம் வேறு, வழிநடத்தும் திறன் வேறு என்றவாறு, 770. 78. படைச் செருக்கு படையின் ஆற்றலையும் செயற்பாட்டுத் திறனையும் எடுத்துக் கூறுவது. அதாவது, ஆற்றல் மிக்குடைய படை உடையோம் யாம் என்னும் குணம் ஈண்டுச்செருக்கு என்று கூறப்பட்டது. 232 தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை