பக்கம்:திருக்குறள் உரை.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் “எண்ணியன முடித்தற்குரியவாறு உடல் உறுதியும் உள்ளத்து உறுதியும் பேணப்படுதல் வேண்டும்” என்பது கருத்து."எண்ணியது முடிக்காமல் சாவோர்கணக்கில் இருப்பர்அல்லர். அதனால் ஒறுத்தலும் இல்லை. ‘சாவாரை என்றாலும் எண்ணியவற்றைச் செய்து முடிப்பதில் உள்ள இடர்ப்பாடுகளுக்கு அஞ்சிச் செய்யாமல் விடுவாரைச் செத்தார் என்றே கருதுதல் வேண்டும் என்று உணர்த்தியது அறிவு. 779. 780. புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு இரந்து கோள் தக்கது உடைத்து. தம்மை வளர்த்து ஆளாக்கியவர் கண்ணிர் மல்கி நிற்கும் வண்ணம் அவருக்கு முன்னே அவருக்காகச் சாகும் சாக்காடு இரந்தும் பெறத் தகுதியுடைய சாக்காடு ஆகும். தம்மை வளர்த்து ஆளாக்கியவர் கண்ணிர் செத்தாரின் தகுதியை உணர்த்துவது. தம்மை வளர்த்து ஆளாக்குவோருக்காக உயிர் கொடுத்து அவரைக் (புரவலரை) காப்பாற்றாமல் சாகவிட்டால் இவரைப் பின் யார் புரந்து காப்பாற்றுவார் என்பதுணர்த்திற்று. 780. 79. நட்பு இருவரும் ஒத்த உரிமைகளும் நலன்களும் உடையராக இடையறாத அன்பு பூண்டொழுகல் நட்பு நட்பு மானிட வாழ்க்கையின் இன்றியமையாத்தேவை. காதல் வாழ்வைத் துறந்து வாழ்தல் இயலும். நட்பின்றி வாழ்தல் இயலாது. 781. செயற்குஅரிய யாவுள நட்பின் அதுபோல் வினைக்குஅரிய யாவுள காப்பு. நட்புச் செய்து கொள்ளுதல் போல் செயற்கரிய செயல் யாதுளது? ஒருவர் செய்யும் காரியங்களுக்கு நட்பைப் போல் வேறு காப்பு ஏது? அரியவற்றுள் அரியது சிறந்த நட்பைப் பெறுதல், நட்புச் செய்தல். ஒருவர் செய்யும் பணிகளுக்குப் பாதுகாப்பு தருபவர்கள், சிறந்த நண்பர்கள் என்பது கருத்து. 781. 782. நிறைநீர் நீரவர் கேண்மை பிறைமதிப் பின்நீர பேதையார் நட்பு. நல்லவர்கள் நட்பு , பிறை நிலா வளர்ந்து முழுமையாதல் போன்ற தன்மையுடையது. அறிவில்லாதவர் நட்பு முழுநிலா தேய்தல் போன்ற தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை 235