பக்கம்:திருக்குறள் உரை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் 35. அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம். மற்றவர் வாழ்க்கையைக் கண்டு பொறாத மனம், தேவை யில்லாதவற்றை அழுக்காற்றின் வழி ஆசைப்படுதல், பெறாத பொழுது வெகுளுதல் (கோபப்படுதல்) தமது முறைகேடான ஆசைக்கு இனங்காதாரைத் திட்டுதல் ஆகியவற்றின் இழுவையிற் செல்லாது அறநெறியில் நின்று வாழ்தல் அறம். - அவா, வெகுளி முதலியன அழுக்காற்றிள் அடிப்படையில் வருவனவாம். அழுக்காற்றினைக் கைவிடின் அவாவும் வெகுளியும் போய் விடும் என்பது உம் அறிக. அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச் சொல் ஆகிய நான்கும் அறத்திற்குப் பகை. இவையுள்ள இடத்தில் அறம் இருக்காது. இருப்பதைப் போலத் தோன்றின் அஃது ஆரவாரம். 35. 36. அன்றுஅறிவாம் என்னாது அறம்செய்க மற்று.அது பொன்றும்கால் பொன்றாத் துணை. அறம் செய்வதற்குரிய காலம் இதுவல்ல என்றும், அது வரும் காலம் அறிவோம் அப்போது செய்வோம் என்றும் எண்ணாது காலம் தாழ்த்தாது அறத்தினைச் செய்க. அங்ங்ணம் செய்த அறம் இறுதிக்காலத்தில் அழியாத் துணை. 36. 37. அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை. சிவிகை ஊர்ந்து செல்வோன் - தூக்கிச்செல்வோனிடையில் உள்ள வேறுபாட்டை அறத்தின் பயன் என்று கூறும் பழக்கம் உடைய சமுதாயத்தை மறுத்துக் கூறியது. இதுவென வேண்டா : வியங்கோள். 'உள்ளது மறுத்தல்' என்ற குறிக்கோளுடையது இப்பா. பொறுத்தல் துன்பம் தருவது. அறத்தில் வளர்ந்தவர்கள் மற்றவள் துன்புறுதலை அதுவும் தமக்காகத் துன்புறுதலை ஒருபொழுதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அப்படியே ஏற்றுக்கொண்டால் அறம் பிழைத்துப் போய் விடுகிறது. 37. 38. வீழ்நாள் படா.அமை நன்றுஆற்றின் அஃது.ஒருவன் வாழ்நாள் வழியடைக்கும் கல். வாழ் நாள் விழும் தன்மையது; இடையிடு உடையது; வாழ்நாள் கழிந்து கொண்டே போகின்றது. ஆதலால், நாள்கள் வீணாகப் போகாமல் தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை 21