பக்கம்:திருக்குறள் உரை.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் 787. அழிவின் அவைநீக்கி ஆறுஉய்த்து அழிவின்கண் அல்லல் உழப்பதாம் நட்பு. அழிவு தரும் செயல்கள் படரும் பொழுது அவற்றைத் தடுத்து நிறுத்தி விலக்கிப் பாதுகாத்தலும், மீண்டும் அழிவு வழியில் செல்லாதிருக்க நன்னெறியில் நடக்குமாறு செய்தலும், ஆளுமை எல்லைகளைக் கடந்து அழிவு வருமாயின் உடனிருந்து அனுபவித்தலும் நட்பின் இலக்கணம். 'அழிவினவை நீக்கி’ எண்பதற்குத் தாமே அழிவிலிருந்தும் பாதுகாத்தல் என்றும் கொள்ளலாம். நண்பன் அல்லலின் வயப்பட்டு உழல நேரின் அவனுடனேயே உழலுதல் நல்ல நட்பிற்குச் சான்று. 787. 788. உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு. இடையிலுள்ள ஆடை இழந்தபோது, கை உடன் அந்த ஆடையை எடுத்து தந்து உதவுவது போல, நண்பனின் துன்பங்களைக் களைவதே நட்பு. 'உடுக்கை இழந்தவன் கைபோல’ என்றிருப்பதால் இடையில் உள்ள ஆடை கிழிந்து விழுந்து விட்டபோது கை, மெய்யது பொத்தி மானத்தைக் காப்பாற்றுதல் போல என்று கூறுவது சிறப்புடைய பொருளாகும். 788 789. நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்னறி ஒல்லும்வாய் ஊன்றும் நிலை. நட்பிற்குரிய சிறப்பு யாதெனில், எஞ்ஞான்றும் மாறுபாடின்றி இயன்றவாறெல்லாம் அறம், பொருள், இன்பச் செயற்பாடுகளில் தளராமல் தாங்குதலாகும். “விற்றிருக்கை வாழ்க்கையில் சிறந்ததோர் இடம். 789. 790. இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று புனையினும் புல்லென்னும் நட்பு. அவர் நமக்கு இத்துணையன்பினர், யாம் இவர்கட்கு இன்ன தண்மையான நட்பியல்புடையேயாம் என்றெல்லாம் கூறினும் நட்பு அற்பமயமானதாகத் தோன்றும், நயந்து பயிலும் நட்புப் பாராட்டுதலை விரும்பாது பழகுதலே பெரும்பேறு. திருக்குறள் விலக்கிய இந்த நட்பு முறையே இன்று பரவிவருகிறது. இதனால் நட்புக் கெடும்; பகைவர்கள் தோன்றுவர். 790. தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை 237