பக்கம்:திருக்குறள் உரை.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்டால் 80. நட்பாராய்தல் முன்னர் நட்புக் கூறப்பெற்றது. வாழ்க்கைக்கு ஓர்உறுப்பாக அமைந்து வாழ்க்கை முழுதும் துணையாக அமையக்கூடிய நட்பினை நல்லவண்ணம் ஆராய்ந்து தேர்வு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்துவது எந்த அதிகாரத்தின் நோக்கம். நட்பாராய்தலுக்கு எடுத்துக்கொள்ள வேண்டியவை மரபுவழி வளர்ந்த முறை, வாழ்க்கை நடந்து வந்துள்ள முறைமை ஆகியனவாம். முன் யாருடனாவது நட்பு உள்ளவரா அல்லது நட்புச் செய்து பிரிந்து வந்துள்ளாரா? எண்பன ஆய்வுக்குரியன. முன் பல நட்புடையோராயின் தவிர்த்தல் நலம். ஏன்? ஒருவர் எத்தனை பேருக்கு நட்பாக அமைந்திருந்து நட்புச் செய்ய இயலும்? நட்புச் செய்து பிரிந்தவராக இருந்தால் இவருடைய நட்பு நிலையானதல்ல. ஆதலால் தவிர்த்திடுக, முன் நட்புச் செய்து பிரிந்து வந்து நண்பரைப் பற்றிப் பழி தூற்றிக் கேடு பல செய்பவரை எந்தக் காரணம் பற்றியும் நட்புக்குரியராக்கிக் கொள்ளுதல் வேண்டாம். 791. நாடாது நட்டலின் கேடுஇல்லை நட்டபின் வீடில்லை நட்பாள் பவர்க்கு. ஒருவரின் நட்புக்குரிய தகுதிகள் பற்றி ஆய்ந்தறியாது நட்புக் கொள்வது போல் கேடு தருவது பிறிதொன்றில்லை. நட்புக் கொண்டபின் விடுதல் நட்பு ஆள்பவருக்கு இல்லை. நட்புக் கொண்டபின் பிரிதல் கூடாது. ஆதலால் ஆய்ந்து தொடர்பு கொள்க என்று அறிவுறுத்துகிறார். ஒரோவழி கொண்ட நட்பு தகுதியில்லாமற் போனாலும் நண்பருக்குத் தகுதிகளை உருவாக்க முயற்சி செய்ய வேண்டுமேயன்றிப் பிரிதல் கூடாது. கெட்ட நண்பர்கள் உடனிருந்து செய்யும் தீமையை விட அவரைப் பிரியின் கூடுதலாகத் தீமைசெய்வர் என்பது உம் அறிக. 791. 792, ஆய்ந்துஆய்ந்து கொள்ளதான் கேண்மை கடைமுறை தான்சாம் துயரம் தரும். பலவகையாலும் பன்முறையும் ஆய்வு செய்து கொள்ளாத நட்புறவு, கடைசிவரை சாதலுக்கு நிகரான துன்பத்தைத் தரும் . குணம், கொள்கை ஆகியவற்றை ஒரு தடவைக்குப் பலதடவை ஆராய்ந்து நட்புக் கொள்ளாவிடின் வாழ்வின் கடைசி வரையில் சாதலை நிகர்த்த துன்பம் தரும் என்றுணர்த்தியது. “கடைமுறை” என்றதால் மாறமாட்டான் என்பது கருத்தாயின் 238 தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை