பக்கம்:திருக்குறள் உரை.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் உடம்பில் உயிர் போலப் பாதுகாத்தல் வேண்டும் என்றுணர்த்துவதற்காகும்.நட்பு அதிகாரத்தில் கூறப்பெறும் செய்திகள் பழைமைஅதிகாரத்தில் கூறப் பெறும் செய்திகளுக்கு முரண்பட்டவையல்ல. வையகத்தில் பிழையேயில்லாத மனிதன் இல்லை. ஆனால் பகுத்துணர வேண்டும். குறைவேறு குற்றம் வேறு. குறைகள் மன்னிக்கத் தக்கன, குற்றங்கள் மண்ணிக்கத்தக்கன அல்ல. எந்தச் சூழ்நிலையிலும் துரோகம், ஏமாற்று முதலியன ஏற்புடையனவல்ல என்பதறிக. பழைமை பல தலைமுறைகள் பழகியநட்பு என்று-அதாவது உழுவலன்பு நட்பு என்று கொள்க. 801. பழைமை எனப்படுவது யாது.எனின் யாதும் கிழமையைக் கீழ்ந்திடா நட்பு. பழைமை எனப்படுவது யாதெனக் கேட்பின், பழைமையுடையர் உரிமையால் செய்வனவற்றைச்சினவாது உடன்படுவதேயாகும். உணவு, மருத்துவம், ஒப்புரவாண்மை ஆகிய துறைகளில் இத்தகு செயல்கள் நிகழ வாய்ப்புண்டு. 801. 802. நட்பிற்கு உறுப்புக் கெழுதகைமை மற்று.அதற்கு உப்பாதல் சான்றோர் கடன். சிறந்த நட்பிற்கு உறுப்பாவது நண்பர் உரிமையாகச் செய்த அனைத்திற்கும் உடன்பட்டு உவத்தலாகிய கடமையே. பழகிய நண்பர் உரிமையால் செய்தனவற்றிற்கு உடன்பட்டு உவத்தல் நட்பிற்குரிய உறுப்பாகும். கர்ணனின் சோழி விளையாட்டை நினைவு கூர்க, 802. 803. பழகிய நட்புஎவன் செய்யும் கெழுதகைமை செய்தாங்கு அமையாக் கடை. பழகிய நண்பர் உரிமையால் செய்த காரியங்களுக்கு உடன்பட்டு நிற்காத பொழுது பழகிய நட்பு என் செய்யும்? கெழுதகை நட்புடையார் செய்யுங் காரியங்களுக்கு உடன்பட்டால்தான் மேலும் நட்பினால் ஆகக்கூடிய காரியங்கள் நடக்கும் என்பது உணர்த்தியது. 803. 804விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையால் கேளாது நட்டார் செயிண். பழகிய நட்புடையார் தம்மைக் கேளாது ஒரு காரியத்தைச் செய்யின் நட்பினால் பொருந்தியநலன்கருதி,கேளது செய்த காரியத்தினையும் விரும்பி தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை 241