பக்கம்:திருக்குறள் உரை.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால் இருப்பர். - இதனால், பழகியநட்பெனினும்கேட்டுச்செய்தலே மரபு என்றுணர்த்தி, ஒரோவழிகேளாது நிகழினும் பொறுத்துக் கொள்க என்று அறிவுணர்த்தியது. 804, 805. பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுஉணர்க நோதக்க நட்டார் செயின். தம்முடைய பழகிய நண்பர் தாம் நோதற்குரிய செயல்களைச் செய்வாராயின் அதற்குக் காரணம் நட்பின் வழிவந்த உரிமை அல்லது அறியாமை என்று கருதிவாளா இருந்திடுக. முன் அதிகாரத்தில் பேதையர் நட்பு கைவிடுக என்றார். இங்குப் பேதைமை என்று கருதிப் பொறுத்துக்கொள்க என்கிறார். இவற்றிற்கிடையில் முரண்பாடு இல்லை. இங்குப் பெருங்கிழமையுடையோர் கேண்மை’ என்பதறிக. 805. 806. எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும் தொல்லைக்கண் நின்றார் தொடர்பு. பழைமை நலஞ்செறிந்த நட்பின் எல்லைவரையில் நின்று பழகியவர்கள் கேடுற்றபொழுதுநின்றார் தொடர்பினை நீக்கமாட்டார்கள். "ஆழமான நட்பு' என்றும் நீங்காது. 806. 807, அழிவந்த செய்யினும் அன்புஅறார் அன்பின் வழிவந்த கேண்மை யவர். அன்பின் வழிவந்த பழைமையான நட்பு நலம் செறிந்த உறவினையுடையார் தமது நண்பர் அழிந்து போகக் கூடிய அளவு துன்பம் செய்யினும் அன்பிலிருந்து நீங்கமாட்டார். நட்பு நலஞ்சான்ற உறவு, அழிவினை ஈடு செய்யும் என்பதறிக. 807. 808. கேளிழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு நாளிழுக்கம் நட்டார் செயின். தம்மொடு பயின்ற நண்பன் தவறு செய்ததைப் பிறர் வாயிலாகக் கேளாத பெருந்தன்மை உடையவருக்குப் பழகுபவர் பிழை செய்யும் நாட்கள் குறையும். “நாளிழுக்கம் நட்டார் செயின்' என்றதால் பழகிய நண்பரிடத்தில் பிழைகள் செய்த நாளிலிருந்து நாள்கள் பழுதாகின்றன. முன்பு பழகிய நாட்களும் கூடப் பயனற்றுப்போகும் என்றுணர்த்தியதாகக் கொள்ளல் சிறப்பு. 242 தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை