பக்கம்:திருக்குறள் உரை.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் நட்பால் பழகும் இருவருக்குமிடையில் மூன்றாவது மனிதரை அனுமதிப்பது நட்பைக் கெடுக்கும். 808. 809. கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை விடாஅர் விழையும் உலகு. உறவுகளுக்குக் கேடின்றிப் பழகி வந்த நட்புறவினை விடாது பேணுபவர் நட்பை உலகம் விரும்பும். பழகிய நட்பில் ஓரிரண்டுபிழைகள் இருப்பினும் நட்பைக்கைவிடாததே அழகு என்றுணர்த்தியது. 809. 810. விழையார் விழையப் படுப பழையார்கண் பண்பின் தலைப்பிரியா தார். பழகிய நட்புடையர் தவறுகளே செய்தாராயினும் பழகும் பண்பின்றும் நீங்காதவர்கள் நட்பைப் பகைவரும் விரும்புவர். நட்பு முதன்மைப்படுத்தப் பெற்ற இடத்தில் பொருளால் நட்பைப் பிரிக்க இயலாது. 810. 82. தி நட்பு தலை சிறந்த நட்டாகிய பழைமையை விளக்கியவர் அதற்கு நேர் எதிர் முறையான தீ நட்பை விளக்குகின்ற அதிகாரம் இது. கொள்ள வேண்டியதை முதலில் கூறி, அதன் பின் விலக்க வேண்டியதைக் கூறுவதே அறிவியல் மரபு. ஏன் எனில் நல்லதை அடையும் முயற்சியிலேயே தீமை விலகும். பொறுத்துக்கொள்ள இயலாத குற்றமுடையவர்களுடைய நட்பு ஆகாது. குற்றங்களாவன: திருந்த விரும்பாமை, கள்ளுண்ணல், சூதாடல், திருடுதல், மறை பிறர்க்குரைத்தல், அழுக்காறு கொள்ளுதல், வஞ்சித்து ஒழுகுதல், சோம்பித் திரிதல் முதலியன. குற்றங்கள் உடையார் நட்பு ஆகாதென்றமையினால் குறைகள் உடையார் நட்பு ஆகும் என்றாயிற்று. 810. 81. பருகுவார் போலினும் பண்புஇலார் கேண்மை பெருகலின் குன்றல் இனிது. அனுபவிக்கத்தக்க காதல் நட்புடையராயினும் பண்பில்லாதவர்களுடைய நட்பு வளர்தலினும் குன்றுதல் இன்பந்தரும். நட்புக்கு இன்றியமையாதது தூய அன்பு. ஆயினும் பண்புள்ள இடத்தில்தான் நட்பு பயன்தரும். ஆதலால் பண்பிலார் தொடர்பு வேண்டாம் என்றார். 811. தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை 243