பக்கம்:திருக்குறள் உரை.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால் 812. உறின்நட்டு அறின் ஒருஉம் ஒப்பிலார் கேண்மை பெறினும் இழப்பினும் என். தனக்குப் பயனுள்ளபோது நட்புச் செய்தும் தனக்குப் பயனில் வழி நட்பிலிருந்து விலகியும் செல்வோர் நட்பு இருந்து என்ன பயன்? இழக்கும் போது என்ன கேடு வந்துவிடப் போகிறது? 812. 813. உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது கொள்வாரும் கள்வரும் நேர். நட்பின் வழிவரும் பயண் பற்றிய அளவு பார்ப்போர் நட்பும், கொடுப்பவரைப் பற்றிக் கருதாது அவர் தரும் பொருளையே கருதும் விலைமாதும், களவு செய்பவரும் ஒரே தன்மையுடையவர்கள். நட்பு, நட்புக்காகவேயாம். பயன் கருதிய நட்பு, நன்மை பயவாது. விலைமாது பெறுவதற்கே உரியவள். அவள் பொருள் தருபவனுக்கு யாதொன்றும் கொடுக்க மாட்டாள். கள்வர் நம்பிக்கைக்குரியரல்லர். 813. 814. அமரகத்து ஆற்றுஅறுக்கும் கல்லாமா அன்னார் தமரின் தனிமை தலை. செருகளத்தில் சுமக்காது தரையில் விழும் அறிவிலாக்குதிரைகளைப் போன்றவர்களின் நட்பைவிடத் தனிமை இனியது. 814. 815. செய்துஏமம் சாராச் சிறியவர் புண்கேண்மை எய்தலின் எய்தாமை நன்று. நட்புச் செய்து வைத்தாலும் தமக்கு அரணாக அமையாதவர்களின் நட்பு உண்டாகித்தான் என்ன பயன்? இல்லாமல் போனால்தான் என்ன குறை? நட்பின் பயன் நட்டாருக்கு அரணாக விளங்குவதே என்று உணர்த்தியது. 815. 816. பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார் ஏதின்மை கோடி உறும். அறிவில்லாதாருடன் பெரிய அளவில் கலந்து பழகிய நட்பினும் அறிவுடையவர்களின் பகை கோடி மடங்கு நன்று. 816. 817. நகைவகையர் ஆகிய நட்பின் பகைவரால் பத்துஅடுத்த கோடி உறும். 244 தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை