பக்கம்:திருக்குறள் உரை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறத்துப்பால் நன்றாற்றின் அந்த நன்மை ஒருவனது வாழ்நாள்கள் வீழ்நாள்களாக அழிந்து விடாமல் வழியடைத்து வளர்ப்பது ஆகும். பிறப்பைத் தடை செய்யும் என்பது கருத்து. வாழ்ந்த நாள்கள் பயனுடையனவாய் அமைந்துவிடின் வீழ்நாள்களாகக் கருதப்பெறா என்றும் கொள்ளலாம். 39. அறத்தான் வருவதே இன்பம்மற் றெல்லாம் புறத்த புகழும் இல. அறவழியில் வருவதே இன்பம். மற்றவையெல்லாம் புறம்பானவை. புகழுக்குரியனவும் இல்லை. அறநெறி வழிவராத இன்பம், அழுக்காறு முதலியனவற்றைத் தோற்றுவித்தலால் இன்பம் அன்று. ஒரோவழி அறநெறி சாராத புகழ் இன்று கிடைக்கிறது. அஃது உண்மைப் புகழன்று. 39. 40. செயற்பாலது ஒரும் அறனே ஒருவற்கு உயற்பாலது ஒரும் பழி. செய்யத்தக்கது அறமே. பழிச்செயல்களைச் செய்யாமல் தப்பித்துக் கொள்ளுவதே ஒருவர் உய்யும் நெறி. 40. 5. இல்வாழ்க்கை காதல்வயப்பட்ட ஒருவனும் ஒருத்தியும் தம்முள் கலந்து கூடி வாழ்தல் இல்வாழ்க்கை என்பதாகும். அறநெறி கண்டுணர்த்திய வாழ்வியல் நெறியில் இல்லற நெறி தலையாயது. அன்பின் விரிவுக்கும் சமூகவரலாற்றின் நீட்சிக்கும் துணை செய்யக்கூடியது இல்வாழ்க்கையேயாம். இல்வாழ்க்கை அர்ப்பணிப்பு உணர்வுடன் கடமைகளைச் செய்யும் களமாகும். இல்வாழ்க்கை அருள்நலம் கனிந்த இறை நல வாழ்க்கைக்கு ஒப்பாகும். அறநெறியின் வழியதாகி அறநெறிக்கு அரணாக அமைதலின், அறம் வலியுறுத்தலினைத் தொடர்ந்து அமைந்தது இல்வாழ்க்கை. 41. இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை. இல்வாழ்க்கையில் வாழ்பவன், இயற்கையிலமைந்த வழி கற்பவர், தவநிலை நிற்பவர், அந்தண வாழ்க்கை மேற்கொள்பவர் ஆகிய மூவகையினர்க்கும் அவர்தம் வழியில் நின்று ஒழுகத்துணையாவான். குலம், சுற்றம், ஊர் ஆகிய மூன்றினையும் என்றும் எடுத்துக்கொள்ளலாம். 41. 22 தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை