பக்கம்:திருக்குறள் உரை.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் 826. நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல் ஒல்லை உணரப் படும். நட்பு செய்தார்போல் நல்லவைகளையே சொல்லினும் பகைவர் தம் சொல்லின் தன்மை உடன் உணரப்படும். சொற்களின் அமைப்பில் நட்புத் தோன்றும். ஆயினும் சொற்களின் வெளிப்பாட்டு முறை, ஒலி அமைவு ஆகியவற்றின் மூலம் சொற்கள் பகைமை வழியன என்பதை உணரலாம். 826. 827. சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம் தீங்கு குறித்தமை யான். வில்லின் வணக்கம் கொல்லுதல் உண்மையாதலால், பகைவர்களிடம் சொல்லில் காட்டப்பெறும் வணக்கம் கொள்ளற்க. 827. 828. தொழுதகை உள்ளும் படைஓடுங்கும் ஒன்னார் அழுதகண் ணிரும் அனைத்து. வணக்கம் செய்யும் பகைவர் கைகளுக்குள்ளும் கொல்லும் கருவி ஒளிந்து இருக்கும். பகைவர் நம்மிடம் அழும் கண்ணிரும் நடித்துக் கொல்லும் தன்மையுடையதே. தொழுதலும் அழுதலும் நட்பின் அடையாளம் மட்டுமல்ல என்பது கருத்து. பகைவர் திறமையாகப் பகைமையை மறைத்துக் கொண்டு தொழுதலும் அழுதலும் செய்து வெல்வர். இது உலக வழக்கு. ஆதலால் விளையும் பயன்களைப் பொறுத்தே நட்பு, தேர்வு செய்யப் பெறுதல் வேண்டும். 828. 829. மிகச்செய்து தம்எள்ளு வாரை நகச்செய்து நட்பினுள் சாப்புல்லல் பாற்று. மனத்தினுள் பகைமை கொண்டு, புறத்தே நட்புத் தொடர்பான உதவிகள் உபசரணைகள் மிகச்செய்து,நட்பாடல் செய்வோரிடம் அதுபோலவே பழகவேண்டுமேயன்றி உண்மையான உறவாக்கிக் கொள்ளக் கூடாது. “உள்ளொன்று வைத்துப்புறமொன்று பேசாதே’ என்பது அறநெறி இது அரசு நெறி. அரசு நெறியில் விதி விலக்கு உண்டு . 829. 830. பகைநட்பாம் காலம் வருங்கால் முகம்நட்டு அகம்நட்பு ஒரீஇ விடல். தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை 247