பக்கம்:திருக்குறள் உரை.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் பேணிக் காக்காமையும் பேதையின் தொழில். "யாதொன்றும்' என்ற சொல்லைக் கொண்டு கூட்டி, யாதொன்றும் நாணாமை, யாதொன்றும் நாடாமை, யாதொன்றும் நாரின்மை, யாதொன்றும் பேணாமை என்று எண்ணுதல் வேண்டும். பிறர் வசையால் வரும் உணர்ச்சி வெட்கம் அல்ல; தன்னுடைய தகுதி செயலின்மை நோக்கி வருவதே வெட்கம். 833. 834. ஓதி உணர்ந்தும் பிறர்க்குஉரைத்தும் தான்அடங்காப் பேதையின் பேதையார் இல். அடக்கத்தினைத் தரும் செயலாகிய நூல்களை ஒதியும், நூல்களின் பயனை உணர்ந்தும், அந்நூற் பயன்களைப் பிறர்க்கு உரைத்தும் தான் அடங்காது வாழும் பேதையைப் போல் வேறொரு பேதை இல்லை. “கற்றதால் மட்டும் பயன் இல்லை' என்பது கருத்து. 834. 835. ஒருமைச் செயல்ஆற்றும் பேதை எழுமையும் தான்புக்கு அழுந்தும் அளறு. பேதை எழு பிறப்புக்களிலும் நரகத்தில் அழுந்துதலுக்குரிய தீமைகளை இந்த ஒரு பிறப்பிலேயே செய்து கொள்கிறான். நாலும் அறிந்து செய்யாமல் ஒரு புத்தியிலேயே காரியங்களைச் செய்பவன் எழுமையும் நரகத் துன்பத்தில் அழுந்துதலுக்குரியனவற்றைச் செய்கின்றான். மதிநுட்பம் நூலறிவு என்றார்போலக் கொள்க. "அழிவதற்குக் காலம் அதிகம் தேவை இல்லை’. 835, 836. பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப் பேதை வினைமேல் கொளின். செய்யும் தொழிலின் செய்ம்முறை தெரியாத ஒருவண் அந்தத் தொழிலைச்செய்யமுற்படுவானாயின் அத்தொழிலின் பயன் கைகூடாது.மேலும் இகழ்ச்சியை அணியாகப் பெறுவான். செயல்கள், செய்யும்முறைமைகளினாலேயே வெற்றியைத் தருகின்றன என்பதை உணர்த்தியது. 836, 837. ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை பெருஞ்செல்வம் உற்றக் கடை. அறிவிலாதவனிடத்தில் செல்வம் சேர்ந்தால் பகைவர் உண்டுமகிழ்வர். சுற்றத்தார் பசித்துன்பமுறுவர். 837. தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை 249