பக்கம்:திருக்குறள் உரை.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால் gonotroy To ** ishtT-R,* கையொன்று உடைமை பெறின். ரு o அறிவிலான் ஒருடைமை பெறுவானாயின் பித்தனைப் போலவும், கள் குடித்தவனைப் போலவும் களித்திடுவான். “ஒருடையை பெறின் என்றதால் பெற வேண்டுவன எல்லாம் பெறவில்லை என்றுணர்த்தியமை அறிக. 838. 839. பெரிதுஇனிது பேதையார் கேண்மை பிரிவின்கண் பிழை தருவது.ஒன்று இல், அறிவில்லாதார் நட்பு பெரிதும் இனிது; அவர் நட்புப் பிரிவின்கண் துன்பம்தருதல் இல்லை.ஆதலால் இனிது. "பேதையார் நட்பு, தருவதொன்றில் ' என்பது ஆய்வுக்குரியது. பேதையார் பிரிவில் துன்பம் வராதா? அதாவது நமக்குத் துன்பம் இல்லை. பேதையார் துண்பமே செய்வார்கள். இதுவே உலகியல். அறிஞர் பிரிவு இழப்பைத் தரும் என்பது உண்மை. 839, 840. கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர் குழாஅத்துப் பேதை புகல். கால்களைத் தூய்மை செய்யாமல் படுக்கையில் வைத்த செயல் போன்றது சான்றோர் அவைக்குள் பேதை புகுதல். 840. 85. புல்லறிவாண்மை அறியாமை உடையவன் அறிஞனைப்போல நடிப்பது புல்லறிவாண்மை அறியாமையுடையாண் அறிவுடையான் போலத் தன்னைக் காட்டிக் கொள்வதால் அறிந்தவர்கள் சொல்வதை மறுப்பான் ஏற்க மாட்டான். இல்லாத ஒன்றை இருப்பதுபோலக்காட்டி நடந்து கொள்வதால் புல்லறிவாண்மை என்று கூறப்பெற்றது. புல்லறிவாண்மையுடையார் என்றுமே அறிந்தோராதல் அரிது. 841. அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதுஇன்மை இன்மையா வையாது உலகு. ஒருவனுக்கு இல்லாமை பலவற்றுள்ளும் இல்லாமை அறிவின்மையே. வேறு எது இல்லையானாலும் அதனை இல்லாமை என்று உலகத்தார் கருதார். அறிவுடையார் எல்லாம் உடையார். ஆதலால் பிறிதிண்மை ஒன்று 250 தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை