பக்கம்:திருக்குறள் உரை.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால் தம்மொடு மாறுபடுவார்மாறுபாட்டை ஏற்காமல் மாறுபாட்டை ஒதுக்கி வைத்து ஒழுகுந்திறன் கொண்டோரை வெல்லுவார் யார்? மாறுபாடுகளை ஒதுக்கிவாழ்வோரை யாவரும் நேசிப்பர்; வெல்ல நினையார் .855. 856. இகலின் மிகல்இனிது என்பவன் வாழ்க்கை தவலும் கெடலும் தனித்து. பிறரோடு மாறுபாடு கொள்ளுதலே இன்பம் என்று மாறுபட்டுச் சண்டை செய்வானின் வாழ்க்கை தவறுதலும், "செல்வம் கெடுதலும் சிறு பொழுதிலேயே அமையும். . மாறுபாட்டின் காரணமாக ஆத்திரப்படுதலால் தாமே இதயப் பாதிப்பால் மரணமெய்தலும் மாறுபாடு முற்றிய வழி நடைபெறும் சண்டையில் கொல்லப்பட்டு உயிர் வாழ்க்கை தவறும். செல்வம் என்பது நாள்தோறும் உழைத்துச் சம்பாதித்துச் சேர்ப்பது. மாறுபாட்டில் ஈடுபடுவோர்க்கு உழைத்துச் சம்பாதிக்கக்காலம் ஏது? அதனால் செல்வம் கெடும். மேலும் மாறுபாட்டைத் தீர்த்துக் கொள்ளும் வழியில் செலவு உண்டாதலாலும் செல்வம் கெடும் என்றார். 856. 857. மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல் இன்னா அறிவி னவர். மாறுபாட்டினை மேற்கொண்டு செல்லும் துன்பியல் அறிவுடையோர், வெற்றி மேவுதலுக்குரிய மெய்ப்பொருளைக் காணாதவர். மிகல் மேவும் மெய்ப்பொருளுக்கு மெய்ப்பொருள் நாயனார் வரலாறு அறிக. . 857. 858. இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம் அதனை மிகல்ஊக்கின் ஊக்குமாம் கேடு. ஒருவன் மாறுபாடு கொண்டு எதிர்த்து வந்தவிடத்துத் தான் எதிராது சாய்ந்து ஒழுகும் இயல்பு ஆக்கம் தரும். அப்படிச் சாய்ந்து போகாது எதிர்த்து நிற்பாராயின் கேடு மிகும். கோழைத்தனம் ஆகாதோ எனின் மாறுபாட்டின் வழியாதலின் கோழைத்தனம் ஆகாது. 858. 859. இகல்காணாண் ஆக்கம் வருங்கால் அதனை மிகல்காணும் கேடு தரற்கு. ஒருவன் செல்வம் வரும்பொழுது ஒருவருடன் மாறுபாடு கொள்ளக் கருதான். தனது செல்வத்துக்குக் கேடு வருங்காலத்திலேயே யாவருடனும் 254 தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை