பக்கம்:திருக்குறள் உரை.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மாறுபடுதலை ஏற்பான். செல்வம் சேர்க்கும் முயற்சியில் ஈடுபடுங்காலத்தில் மாறுபாடுகளை ஏற்க மாட்டான். செல்வத்தை அழித்துக் கொள்ள நினைப்புழி எவருடனும் மாறுபாடுகளை ஏற்பான். 859. 860. இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம் நன்னயம் என்னும் செருக்கு. ஒருவனுக்கு மாறுபாடு ஒன்றினாலே பொல்லாதனவெல்லாம் உண்டாம். நட்பொன்றினாலேயே நல்ல செல்வம் என்னும் செருக்கு உண்டாம். 860. 87.பகை மாட்சி தனது அறியாமை, செயல்திறன் இன்மை முதலியவற்றால் பகைவரைப் பெருமைக்குரியவராக்கல். பகைவனை அலட்சியப்படுத்தாது, பகைவனுடைய தகுதிப்பாடுகளை மதித்தல். 'நல்லதோர் பகை' என்ற கம்பன் வாக்குணர்க. 861. வலியார்க்கு மாறுஏற்றல் ஒம்புக ஓம்பா மெலியார்மேல் மேக பகை. தம்மினும் வலிமையுடையோரிடம் மாறுபாடு கொண்டு எதிர்த்தலைத் தவிர்த்திடுக; தம்மின் மெலியார்க்குப் பகைவராதலை விரும்புக. “தம்மின் மெலியார் மேல் பகை மேவுக -அறநெறிவழி ஏற்புடையதன்று. பகையைப் பராமரித்துக் கொள்க என்று கூறலாமா? 861. 862. அன்பிலன் ஆன்ற துணைஇலன் தான்துவ்வான் என்பரியும் ஏதிலான் துப்பு. யார்மாட்டும் அன்பிலான், அதுவேயுமன்றி ஆழ்ந்த துணையுமில்லாதவன், தன் வாழ்க்கையில் குன்றுதல் ஆவான். இத்தகையோன் தன் மீது வந்த பகையாளியின் வலியை எப்படித் தொலைப்பான்? 862. 863. அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான் தஞ்சம் எளியன் தமக்கு. அஞ்சத்தக்கன அறிந்து அஞ்சாதவன், அறிய வேண்டுவனவற்றை அறியாதவன், அமைதி காக்கவும் மாட்டாதவன், ஈகையும் இல்லாதவன் தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை 255