பக்கம்:திருக்குறள் உரை.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால் இத்தகையோன் பகைவனுக்கு மிகவும் எளியனாகிவிடுவாண். 863, 864. நீங்கான் வெகுளி நிறைஇலன் எஞ்ஞான்றும் யாங்கணும் யார்க்கும் எளிது. கோபம் நீங்கப் பெறாதவனும் நிறையில்லாதவனுமாகிய ஒருவன் எந்நாளும் எங்கேயும் எவருக்கும் எளியவனாவான். இங்கு எளிமை பண்பாட்டு எளிமையன்று இழிவின்பாற்பட்ட எளிமை. 4 865. வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான் பண்பிலன் பற்றார்க்கு இனிது. நீதி நூலை ஓதி, அந்நீதி நூல் ஒதும் வழியை நோக்கமாட்டான். வாய்த்த தொழிலைச் செய்யான் வரக்கூடிய பழியை நோக்கான். பண்பு இல்லாதான் - இத்தகையோன் பகைவருக்கு இனியன். நிறைநலம் இல்லாதானைப் பகைவன் எளிதில் வெற்றி கொள்ள இயலும் என்பதால் இனிது என்றார். 865. 866. காணாச் சினத்தான் கழிபெரும் காமத்தான் பேணாமை பேணப் படும். தன்னையும் பிறரையும் காண இயலாத கோபத்தையுடையவன், மிகுந்த காம உணர்ச்சியுடையோன் இவன்றன் உறவு பேணாத நிலை மேற்கொள்ளப்பெறும். வெகுளியின் உச்ச எல்லையில் ஒன்றும் அறியா நிலை ஏற்படுமாதலால் “காணாச் சினத்தன்” என்றார். 'கழிபெருங் காமத்தான்'- மிகுந்த பெண் போகி என்றும் கூறுவர். ஆயினும்மிகுந்த பெண்போகம் தரும்துன்பத்தைவிடப்பணக்காரனாகும்.ஆசை புகழ்வேட்டை, ஆதிக்க அதிகார வேட்கை முதலியனவும் கொடியதுன்பங்களை விளைவிக்கின்றமையை ஒர்க. துறவிலும்கூட மண்ணை, பொன்னைத் துறவாது பெண்ணை மட்டும் துறப்பது ஏன்? இம்மூன்றில் எது சமூகத்திற்குப் பெருந்தீங்கு செய்யக் கூடியது? 867. 867. கொடுத்தும் கொளல் வேண்டும் மன்ற அடுத்துஇருந்து மாணாத செய்வான் பகை. தன்னை அடுத்திருந்து தனக்குப் பொருந்தாதன செய்வானின் 256 தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை