பக்கம்:திருக்குறள் உரை.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தம்மில் பெரியாரை மதிக்காது ஒழுகின் அப்பெரியாரால் தீராத் துன்பங்கள் வரும். பெரியாரை மதிக்காத மனநிலையில் தாமே துன்பங்களை வரவழைத்துக் கொள்ளுதல் உண்டு. காப்பில் பயனில்லை. 892. 893. கெடல்வேண்டின் கேளாது செய்க அடல்வேண்டின் ஆற்று பவர்கண் இழுக்கு. ஒருவன் கெட்டுப் போக நினைத்தால் தம்மில் பெரியாரிடம் கேட்காமல் செய்க. உன்னை அழித்துக் கொள்ளவேண்டுமானால் உன்னிலும் பெரியாருக்கு அவமதிப்பினைச் செய்க. தம்மில் பெரியாரைக் கலந்து கேட்டுச் செய்தல் வெற்றிக்கு வாயில், 893. 894. கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு ஆற்றாதார் இன்னா செயல். தம்மில் வலிமையுடையாருக்குத் துன்பம் செய்தல் கூற்றுவனை அழைத்தது போன்றது. தம்மில் வலிமையுடையோரைப் பகைத்துக் கொள்ளல் மரணத்தை அனைத்துக் கொண்டது போல் என்பது கருத்து. 894. 895. யாண்டுச்சென்று யாண்டும் உளராகார் வெம்துப்பின் வேந்து செறப்பட் டவர். ஆற்றல் மிக்குடைய அரசரால் கோபிக்கப்பட்டவர்கள் எங்கும் சென்று உளராக வாழ்தல் அரிது. வேந்தன் இயல்பாகச் சினங்கொள்வான். அத்தகைய வேந்தனால் கோபிக்கப்பட்டவன் யாதொன்றுக்கும் ஆகான். அவன் யாண்டு செல்லலும் அரிது; வாழ்தலும் அரிது. 895. 896. எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார் பெரியார்ப் பிழைத்தொழுகு வார். நெருப்பினால் சுடப்பட்டாலும் தப்பித்துக் கொள்ளலாம். தம்மில் வலியாரை அவமதிப்பவர்கள் வாழ்தல் அரிது. நெருப்பு தொடர்ந்து சுடுதல் இல்லை. வலியார் வஞ்சம் தீர்க்கும் வரை ஒயார். ஆதலால் வலியாரை அவமதிக்க வேண்டாம். 896. 897.வகைமாண்டவாழ்க்கையும் வான்பொருளும் என்னாம் தகைமாண்ட தக்கார் செயின். ஒருவன் பெறுதற்குரியனவெல்லாம் பெற்று வாழும் வாழ்க்கையும் வளமும் வலியாரின் பகைவந்துறின் என்னசெய்ய இயலும்?-897, தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை 263