பக்கம்:திருக்குறள் உரை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறத்துப்பால் 46. அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றின் போஒய்ப் பெறுவது எவன். ஒருவன் அறத்தின் வழியே இல்வாழ்க்கை வாழ்வானாயின், அவன் அறமல்லாத நெறிகளில் சென்று பெறக்கூடியது என்ன? புறத்தாறு அறமல்லாத வழிகள், துறவுநெறி என்று வலிந்து பொருள் கொள்ளுதல் இயைபன்று. 46. 47. இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் முயல்வாருள் எல்லாம் தலை. இயல்பான இல்வாழ்க்கை வாழ்பவன் வாழ்க்கை முயற்சியில் ஈடுபட்டிருக்கும் அனைவரிலும் தலையாயவன். இயல்பினான் இல்வாழ்க்கை -வாழ்க்கை வாழ்வதற்கே, பொறிகளும் புலன்களும் துய்த்து மகிழ்வதற்கே! இதுவே வாழ்க்கையின் இயற்கை யாயமைந்த இயல்பு, மற்ற முயற்சிகள் செயற்கை. 47. 48. ஆற்றின் ஒழுக்கி அறன்இழுக்கா இல்வாழ்க்கை நோற்பாரின் நோன்மை உடைத்து. தவம் இயற்றுவோரை அவர்தம் நெறியில் ஒழுகச் செய்தும் தாம் அறநெறி பிறழாத இல்வாழ்க்கை வாழும் வாழ்க்கை நோற்பவர் வாழ்க்கையினும் சிறப்புடையது. தாம் வாழ்தலோடன்றித் தவம் இயற்றுவோருக்கும் உதவி செய்வதால் சிறப்புடையதாயிற்று. 48. 49. அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும் பிறண்பழிப்பது இல்லாயின் நன்று. அறம் என்று சிறப்பித்துக் கூறப்பெறுவது இல்வாழ்க்கையே. அதுவும் பிறன் பழிக்கத்தக்கதாக இல்லாமல் இருந்தாலே நன்றாகும். தற்சார்பான பொருள் வாழ்க்கைவழியும் குடும்ப ஒற்றுமை இல்வழியும் நன்மக்கட்பேறு இல்வழியும் இல்வாழ்க்கை பழிப்புடையதாகும்.49, 50. வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும். இம்மண்ணில் வாழ்வாங்கு வாழ்பவன், வானுறையும் தெய்வங்களின் வரிசையில் வைத்தெண்ணப்படுவான். 24 தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை