பக்கம்:திருக்குறள் உரை.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் 91. அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய் தொடியார் இன்சொல் இழுக்குத் தரும். வரைவின் மகளிர்அன்பின் காரணமாகவிரும்பமாட்டார்கள்.பொருளின் காரணமாகவே விரும்புவர். வரைவின்மகளின் இன்சொல்லும் கூட இழப்பையும் அவமானத்தையுமே தரும். “இன்சொல் இழுக்குத் தரும்' என்றதால் இன்சொல் புனுகு தடவிய புண்ணே என்றுணர்க. 911. 912. பயன்துக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர் நயன்துக்கி நள்ளா விடல். ஒருவனிடம் பெரும்பயனைக் கருதிப் புகழ்ந்துரைத்து, பின் பயன் இல்லாத போழ்து, பண்பில்லாதவாறுநடந்துகொள்ளும் விலைமாதர்நிலை கண்டு அணுகாது கைவிடல் வேண்டும். - பயனை மட்டுமே குறிக்கோளாக உடைய உறவுகள் வளரா என்பது கருத்து. 912. 913. பொருட்பெண்டிர பொய்ம்மை முயக்கம் இருட்டறையில் ஏதில் பிணந்தழிஇ யற்று. பொருளுக்காக வாழும் மகளிரின் பொய்யான மயக்கத்தன்மையுடைய கூடல், இருட்டறையில் இனமல்லாத பிணத்தைத் தழுவியதைப் போன்றது. உண்மையான உணர்வு வயப்பட்ட (கலவி) உடல் தெளிவு சார்ந்த இன்பநலன்கள் தரும். பொருட்பெண்டிரின் உடலைக் கூடல் முயக்கம், சோர்வு, நோய் முதலியன தரும். 943. 914. பொருட் பொருளார் புண்னலந் தோயார் அருட்பொருள் ஆயும் அறிவின் அவர். - இன்பப் பொருளை இகழ்ந்து பொருளையே பொருளாக எண்ணும் மகளிரின் நலனில் அருளினை விரும்பி ஆயும் அறிவினர் தோயார். 'இன்பம்’- பொருளாதல் தொல்காப்பியத்தால் உணர்க. 914. 915. பொதுநலத்தார் புன்னலந் தோயார் மதிநலத்தின் மாண்ட அறிவி னவர். பொருள் கொடுப்போர் அனைவருக்கும் பொதுமையாகி நலன்அளிப்போரின் புன்மைத்தன்மையுடையநலத்தில் தோய்தல் அறிவு நலத்தில் சிறந்தார்க்கு இல்லை. தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை 267