பக்கம்:திருக்குறள் உரை.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால் 'இன்பநலன் நுகர்வானின் உளநலம் சார்ந்தது. அதனால், வேறுபடுதல் இயற்கை என்றும் இன்பநலன் பொதுமையாதல் இல்லை; இயலாது. 915. 916. தந்நலம் பாரிப்பார் தோயார் தகை செருக்கிப் புன்னலம் பாரிப்பார் தோள். தனது நலத்தினை எண்ணிப் பாதுகாக்கும் எவரும் அழகு, கலை முதலியவற்றால் செருக்குடையவராக இருக்கும் பொருட்பெண்டிரின் புன்மையான நலம் தோய்தல் செய்ய மாட்டார். ஒவ்வொருவருடைய உடல் நலம், மனநலம், ஒழுக்க நலம் ஆகியன பிறர்க்குக் கேடு செய்யாத தந்நலம் ஆதலால் வரவேற்கத் தக்கது. 916. 917. நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வர் பிறநெஞ்சிற் பேணிப் புணர்பவர் தோள். உடலால் ஒருவரையும் நெஞ்சால் ஒருவரையும் புணரும் புண்மையரின் தோளில் தோய்பவர்கள் நிறைந்த நெஞ்சு இல்லாதவர்கள். பொருள்கருதிப்புணர்பவர்கள் சுழற்சிநிலையைக் கருத்திற்கொண்டு “பிற நெஞ்சிற்பேணிப்புணர்பவர்' என்றார். 917. 918. ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கென்ப மாய மகளிர் முயக்கு. ஆராய்ந்து அறியும் அறிவு பெறாதார்க்கு மாயம் செய்யும் மகளிரின் புணர்ச்சிபேயின் முயக்கம் போன்றது. "பேய் பிடித்தால் அவ்வளவுதான். பேயாட்டம் ஆடியே தீரும். அதுபோலத்தான் மாய மகளிரும். 918. 919. வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப் பூரியர்கள் ஆழும் அளறு. மணமாகிய கட்டுப்பாடு இல்லாத மகளிரின் தோள் தோய்தல், கீழ் மக்கள் புகுந்து அழுந்தி அழியும் நரகமாகும். 919 920. இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும் திருநீக்கப் பட்டார் தொடர்பு. திருமகளால் ஒதுக்கப் பெற்றவர்களுக்கு இருமனப் பெண்டிரும் கள்ளும்,குதும் உரியனவாம். 268 தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை