பக்கம்:திருக்குறள் உரை.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் கள்குடி உடலை, அறிவை மிகுதியும் பாதிக்கும் என்பதனால் 'கள் குடிக்கவில்லை’ என்று கூறுவது நிற்காது. 928. 929. களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க் குளித்தானைத் தீத்துரீஇ அற்று. கள்குடித்துக் களித்து வாழ்வானை, களித்து வாழும் வாழ்க்கைக்குக் காரணமாகக் காட்டுதல், நீருக்குள் மூழ்கியவனைத் தீப்பந்தம் கொண்டு தேடினாற் போன்றது. நீருக்குள் தீப்பந்தம் எரியாது. தேடுதல் இயலாது. கள்ளுண்ணல் களிப்பைத் தராது(மயக்கம் களிப்பல்ல). களிப்பைக் கொல்வது கள் என்று உணர்த்தியவாறு. 929. 930. கள்ளுண்ணாப் போதில் களித்தானைக் காணுங்கால் உள்ளன்கொல் உண்டதன் சோர்வு, கள்ளுண்டு மயங்கிக் கிடப்பானைகள்கடிப்பழக்கம் உடையான் - கள்ளுண்ணாநிலையில் காண மாட்டானா?அப்படிக் கானும் பொழுது கள்ளுண்டவன் பெற்றுள்ள சேர்வைக் கண்டு புத்தியைக் கொள்முதல் செய்ய மாட்டானா? கள்ளுண்ட நிலையில் சோர்ந்து கிடக்கும் ஒருவனை கள்ளுண்ணா நிலையில் காணும் குடிகாரன் கள்குடியின் தாக்கமாகிய சோர்வை உணர L,Lា? 930. 94.குது. என்பது பணத்தை மையமாக வைத்து விளையாட்டின்வழியும் @paps': மற்றவர் :: கவர்தல். சூது உழைப்பினைக் ಫ್ಲಿ பகை வளர்க்கும்; பண ஆசையைத் தூண்டும். சூதாடல் தீய பழக்கம்.பரிசுச் சீட்டுக்கள் வழிப் பொருள் தேடுதல் கூடச் சூதுதான். 931. வேண்டற்க வென்றிடினும் துதினை வென்றது.உம் தூண்டிற்பொன் மீன்விழுங்கி யற்று. சூதாட்டத்தினை விரும்பவேண்டாம் வெற்றிபெற்ற சூழ்நிலையிலும் சூதுாட்டத்தினை விரும்ப வேண்டாம்.துண்டிலின் இரையால் மறைந்த நுனி இரும்பை இரையென மீன் கருதி விழுங்கித் துண்புறவது போலச் சூது பொருளிழப்பைத் தரும். சூதில் காலம், அறிவு , உழைப்பாற்றல் , பொருள் அனைத்தையும் இழப்பதால் “வேண்டற்க” என்று ஐயத்திற்கிடமின்றிக் கூறினார். 931 தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை 271