பக்கம்:திருக்குறள் உரை.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் வாழ்வாங்கு வாழ்தல்: திருக்குறள் வகுத்து வழி நடத்தும் வாழ்வியல்வழி வாழ்தலே, வாழ்வாங்கு வாழ்தல். 50. 6. வாழ்க்கைத் துணைநலம் தலைமகன் ஒருவனுடைய வாழ்க்கைக்குத் துணையாக அமைந்த நலம் பயக்கும் பெண்ணின் இயல்புகளையும் கடமைகளையும் கூறுவது. நல்ல துணை பயன் தருவது முடிவாதலின் வாழ்க்கைத் துணைநலம் என்றே கூறினார். ஒவ்வோர் ஆடவனின் புகழ்மிக்க வாழ்க்கையின் பின்னணியில் ஒவ்வொரு பெண் இருக்கிறாள், என்ற உரை உடன் எண்ணத்தக்கது. 51. மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை. மனையற வாழ்க்கைக்குரிய குணநலன்களைப் பெற்று, தன்னைக் கொண்ட தலைவனின் வருவாய்க்குத் தக்கவாறு வாழ்க்கையை நடத்துகிறவள் வாழ்க்கைத் துணை. 51, 52. மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை எனைமாட்சித்து ஆயினும் இல். வாழ்க்கைத்துணை நலமாக அமைந்தவளிடம் மனையறத்திற்குரிய சிறந்த குணநலன்கள் இல்லாமற் போயின், வாழ்க்கை எத்துணைச் சிறப்புக்களைப் பெற்றிருப்பினும் இல்லாதது போலவேயாகும். பொருளுடைமை முதலிய சிறப்புகள் பயனுடையவாதல், வாழ்க்கைத் துணைநலத்தின் சிறப்பினாலேயாம். 52. 53. இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென் இல்லவள் மாணாக் கடை. - வாழ்க்கைத் துணைநலமாகிய இல்லாள் பெருமைக்குரிய குணநலன்களைப் பெற்று விளங்கினால் இல்லாதது எது? அவள் பெருமைக்குரிய தகுதிகள் உடையவளாக இல்லாது போயின் உள்ளது எது? இருப்பதும் இல்லாததும் பொருள்களின்பாற்பட்டனவல்ல. இவற்றோடு தொடர்பு கொண்டவர்களின் குணநலன்களைப் பொருத்தனவேயாம். 53. 54. பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும் திண்மைஉண் டாகப் பெறின். கற்பென்று சிறப்பித்துக் கூறப்பெறும் உறுதிப்பாட்டைப் பெறின், பெண்ணை விடப் பெருமைக்குரியது எது? எதுவும் இல்லை என்பது கருத்து. தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை 25