பக்கம்:திருக்குறள் உரை.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் அது ஈகையன்று. 953. 954. அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார் குன்றுவ செய்தல் இலர். உயர்குடியில் பிறந்தார் அடுக்காக உள்ள கோடி செல்வம் பெறினும், குடிப்பிறப்புக் குன்றும் இழி செயல்களைச் செய்யார். “கோடி பொருளினும் குடிப் பண்பு பெரியது'. 954. 955. வழங்குவது உள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி பண்பின் தலைப்பிரிதல் இன்று. பழங்காலந்தொட்டு வழிவழி வரும் குடிமரபினர் வழங்குவது சுருங்கிய நிலையிலும் பண்புடைமையிலிருந்து நீங்கார். “கொடுப்பது சுருங்குதலே உயர் குடியினருக்கு வறுமை’. 955. 956. சலம்பற்றிச் சால்புஇல செய்யாரமாசு அற்ற குலம்பற்றி வாழ்தும்என் பார். குற்றமிலாநற்குடிப்பிறந்து வாழும் பெற்றியுடையார் தாழ்வு வந்துழியும் வஞ்சனை செய்யார்.நேரடியான வாயில்கள் மூடப்பட்டுழி , வஞ்சனை விாயில்களைத் தேடுவது இயற்கை ஆயினும் நற்குடிப் பிறந்தார் வஞ்சனை செய்யார் என்பது வலியுறுத்தியவாறு. 956. 957. குடிப்பிறந்தார்கண் விளங்கும் குற்றம் விசும்பின் மதிக்கண் மறுப்போல் உயர்ந்து. ஆகாயத்தில் உள்ள சந்திரனிடத்தில் உள்ள கருப்புப்போல, நற்குடிப் பிறந்தாரிடம் காணப்படும் குற்றம் விளங்கித் தோன்றும். உயர்ந்த குடியின் கண் தோன்றும் சாதாரணக் குற்றமும் விளங்கித் தோன்றும் ஆதலால் விழிப்புத் தேவை என்பதை உணர்த்தியது. 957. 958. நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக் குலத்தின்கண் ஐயப் படும். உயர்குடிப் பிறந்தான் ஒருவனிடம் நலம் பயக்கும் பண்புகளுக்கு மாறான இயல்புகள் தோன்றினால் அவன் குடிப்பிறந்த குடிமரபு ஐயத்திற்குரியதாகும். உயர்குடிப் பிறந்தான் ஒருவன், தன் தவறால் தன்னுடைய குடியை ஐயத்திற்குரியதாக ஆக்க வேண்டாம் என்றவாறு. 958. தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை 277