பக்கம்:திருக்குறள் உரை.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால் 959. நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும் குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல். படுத்துக் கிடந்த நிலத்தின் இயல்பைக் கால்கள் காட்டும். அதுபோல நற்குடிப் பிறந்தாரை அவர்தம் வாய்ச் சொல் காட்டும். நிலத்தின் புழுதி அல்லது இயல்பு கால்களில் ஒட்டுதல் வழி புலப்படும். அதுபோல் நற்குடிப்பிறந்தாரைஅவர்தம் சொற்கள்புலப்படுத்தும். நெஞ்சு = நிலம் சொல் = கால். 959. 960. நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம்வேண்டின வேண்டுக யார்க்கும் பணிவு. ஒருவன் நலம் வேண்டுவானாயின் நாணுதலை விரும்ப வேண்டும் உயர்குடிப் பிறப்பு வேண்டுவானாயின் எல்லோர்க்கும் பணிதல் வேண்டும். 960, 97.шоп6яrці) தமக்கும் தாம் பிறந்த குடிக்கும் தாழ்வு வராது காக்கும் உணர்வு மானமாகும். செய்ய வேண்டுவனவற்றைச் செய்யாது இழிவுபடுதல், செய்ய வேண்டாதது செய்து இகழ்ச்சியுறுதல், தாமும் தம் குடியும் அறியாமையிலும் வறுமையிலும் கிடந்துழலும் கொடுமை கண்டு வருந்தல்; மாற்றம் விரும்புதல் ஆகியன மானமாம். 961. இன்றி அமையாச் சிறப்பின ஆயினும் குன்ற வருப விடல். உயர்குடிப் பிறந்தான் ஒருவன் தமது குடிப்பிறப்பின் பெருமை கெடாதவாறு வரும் சிறப்பு (பெருமை) இன்றியமையாதவையாக இருப்பினும் ஏற்க மாட்டார்கள். வாழ்தலுக்கும் மேலும் வளர்தலுக்கும் உரிய சிறப்பு இன்றியமையாச் சிறப்பு. ஒரு காரியம் செய்யாவிடத்துச் சிறப்பு வரும் என்றாலும் “உயர் குடிப்பிறந்தார் செய்யா தொழியின் ' என்றும் கூறுவர். தவறில்லையாயினும் சிறப்புடைப் பொருளாகாது. 961. 962. சீரினும் சீர்அல்ல செய்யாரே சீரொடு பேராண்மை வேண்டு பவர். புகழ் தேடும் வழியிலும் சீரல்லதைச் செய்யார் சீரொடு பேராண்மை வேண்டுபவர். 278 தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை