பக்கம்:திருக்குறள் உரை.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் "பேராண்மை’ என்பது வஞ்சம் தீர்த்தல் அல்ல; அகிம்சையும் பேராண்மையே. 962. 963. பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய சுருக்கத்து வேண்டும் உயர்வு. செல்வப்பெருக்கத்தின் போதுபணிவு வேண்டும். சிறுமையுடன் கூடிய வறுமை வந்த பொழுது பெருமித உணர்வு வேண்டும். “செல்வச் செருக்கு” பணிய ஒட்டாது. ஆதலால் செல்வ ஆக்கம் வந்த பொழுது பணிவு வேண்டும் என்றார். வறுமையின் உடன் வரும் இரத்தல் முதலிய இழிவுகளைத் தவிர்க்க “உயர்வு வேண்டும் ' என்றார். 963. 964. தலையின் இழிந்த மயிர்அனையர் மாந்தர் நிலையின் இழிந்தக் கடை. தலையினை விட்டு நீங்கிய மயிரினை ஒப்பர் தம் நிலையின்றிழிந்த மாந்தர்."இழிந்த' என்பதால் தானே உதிர்ந்தது என்று கொள்க. வேண்டாத மயிரினை நீக்கவும் செய்கின்றனர். தலையினின்று பிரிந்த மயிர் இன்று சவுரியாக விலை போகிறது என்பதனை மறவாதீர். சவுரிக்கு நல்லமதிப்பு. 964. 965. குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ குன்றி அனைய செயின். குடிப்பிறப்பில் குன்று போல உயர்ந்து விளங்குவோரும் ஒரு சிறு குன்றிமணியளவு குடிப்பிறப்புக்கு ஒவ்வாத காரியங்களைச் செய்யின் குன்றி விடுவர். ' குன்றி-குன்றி மணி சிந்திக்கத்தக்கது. 965. 966. புகழ்இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் என்மற்று இகழ்வார்பின் சென்று நிலை. - புகழ் இல்லை; தேவருலகில் செலுத்துதலும் இல்லை. அஃது தெரிந்தும் தம்மை இகழ்வார் பின் சென்று நிற்றல் ஏன்?புகழ்பட வாழ்தல் வேண்டும். அங்ங்ணம் புகழ் படவும் வாழாமல் இகழ்வார்பின் சென்று நிற்றல் தகாது. 966. 967. ஒட்டார்பின் சென்றுஒருவன் வாழ்தலின் அந்நிலையே கெட்டான் எனப்படுதல் நன்று. ஒருவனுக்குத் தன்னை ஒட்டி உறவு கொள்ளாது இகழ்வார் பின் வாழ்வதை விட, அவன் கெட்டுப்போனான் என்ற சொல்லோடு வாழ்தல் நன்று. விரும்பி உறவு கொள்ளாது இகழ்வாரின் பின் செல்வதில் என்ன பயன்? ஒன்றுமில்லை. மானமிழப்பதுதான் மிச்சம். ‘‘கெட்டான்' பொருள் முதலிய வளத்தில் குன்றிப் போன நிலை. 967. தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை 279