பக்கம்:திருக்குறள் உரை.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் எல்லா உயிர்களும் பிறப்பால் ஒத்தன. செய்கிற தொழில் வேற்றுமையால் சிறப்புரிமை பெற உரிமையுடையன அல்ல. பிறப்பில் எல்லா உயிர்களும் இயல்பில் உரிமையில் ஒரே தன்மையுடையன. ஆயினும் வளர்ச்சியின் காரணமாக தொழில் வேறுபாட்டால் - அவ்வேறுபாட்டின் காரணமாகச் சிறப்புரிமைகள் பெறத் தகுதியுடையன அல்ல. 972. 973. மேல்இருந்தும் மேல்அல்லார் மேல்அல்லர் கீழ்இருந்தும் கீழ்அல்லார் கீழ் அல் லவர். உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள் பெரியவர்கள் அல்லர். ஒருவர் தாழ்ந்த நிலையிலிருந்தாலும் பெருமைக்குரியரல்லர் என்று கூறல் இயலாது. பெரிய இடத்தில் சின்னப் புத்தியுடையவர்களும் சின்ன இடத்தில் மிகப் பெரிய பண்புடையவர்களும் இருக்கிறார்கள் என்பது கருத்து.இருக்கும் இடம்-நாற்காலி பெருமைக்குரியன அல்ல.பண்புடைமைதான் காரணம். 973. 974. ஒருமை மகளிரே போலப் பெருமையும் தன்னைத்தான் கொண்டுஒழுகின் உண்டு. ஒருவனிடமே உள்ளத்தை வைக்கும் மகளிரைப் போல் ஒருவன் தான் மேற்கொண்டுள்ள பண்புநழுவாமல் வாழ்ந்தால் பெருமை உண்டு. மகளிர்க்குக் கற்பு;ஆடவர்க்குப்பண்பாடு பெருமைக்குரிய ஒழுகலாறாகும் 974. 975. பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின் அருமை உடைய செயல். பெருமைக்குரியவர்கள் எந்தச் சூழ்நிலையிலும் செயற்கரிய அருமையுடைய செயல்களையே செய்வர் செயற்கரிய செயல்களைச் செய்து முடித்தலிலேயே பெருமை தங்கி இருக்கிறது. 975. 976. சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப் பேணிக்கொள் வோம்எனும் நோக்கு. தம்மில் பெரியோரைப் பேணி ஒழுகும் இயல்பு சிறியவர் உணர்வில் இல்லை. "சிறியோர் ' - தம்மைத் தாமே வியந்து கொள்ளும் இயல்பினர். ஆதலால் பெரியாரைப் பேணும் நெறி அறியார், 976. 977. சிறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான் சீரல் லவர்கன்ை படின். பெரியாருக்குரிய சிறப்புத் தானும் சிறியோர்கண் வந்து பொருந்திடின் தருக்கின் வழிப்பட்டசெயல்களையே செய்வன் தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை 281