பக்கம்:திருக்குறள் உரை.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் ஒழுகுதல் செய்வாருக்கு நல்லவையெல்லாம் இயற்றுதல்கடமை என்று கூறலாம். “அமைதி சால்புகளில் எல்லாம் சிறந்தது. அமைதிவாய்ப்பின் மற்ற குணங்களும் வந்தமையும். 981. 982. குணநலம் சான்றோர் நலனே பிறநலம் எந்நலத்து உள்ளது.உம் அன்று. சான்றோரின் நலம் நற்குணங்களால் ஆய நலம். பிறநலன்கள் ஒரு நலத்தினும் உள்ளதன்று. 'பிறநலம்' உடல் உறுப்புக்கள் அமைதல், அறிவு, செல்வம் முதலியன. 982. 983. அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு ஐந்துசால்பு ஊன்றிய தூண். அன்பு, நாணம், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை என்ற ஐந்து நற்குணங்களும் ஊன்றிய தூண்களாக சான்றாண்மை தாங்கி நிற்கின்றன. அன்பு என்பது தன்னலம் பாராட்டாது, மற்றவர்களிடம் பரிவு காட்டுதலாகும். தகாதன செய்ய அஞ்சுதல் நாணம். ஒத்ததறிந்து கூடி வாழ்தல் ஒப்புரவு. தொடர்புடையார் மாட்டுத் தவறுகள் கண்டபோது கடுந்தண்டம் வழங்காது அறிவுறுத்தல் முதலிய முயற்சிகளால் மேம்படுத்தல கண்ணோட்டம். 983. 984. கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை சொல்லா நலத்தது சால்பு. கொல்லாமையை மேற்கொள்ளுதலே நோன்பு, பிறர் குற்றத்தைச் சொல்லா நலமே சான்றாண்மை. பிறர் குற்றம் கூறுதல் மூலம் தீமைகள் விளைதலினும் நலம் விளைவதற்குரிய வாயில்கள் தடைப்படுவதனாலும் "பிறர் தீமை சொல்லா நலத்தது சால்பு' என்றார். 984. 985. ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர் மாற்றாரை மாற்றும் படை. ஓர் அறச் செயலைச் செய்வோரின் ஆற்றல் பணிவுடைமையில் இருக்கிறது. சால்புடையார் தம்முடன் ஒத்து வராதாரை மாற்றும் கருவியாகத் தழுவித் துணையாகக் கூட்டிக் கொள்ளுதலேயாம். உடன்படாதாரைப் பகைவர் நிலையிலேயே நீட்டித்து வைத்துக் கொண்டிருந்தால் வீண்வம்பும் சண்டையும் தான்மிகும். காரியம் எதுவும் செய்ய இயலாது. 985. தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை 283